Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் 8 எபிசோடுகளின் அனைத்து அப்டேட்களையும் பெறுங்க
Hindustan kannada Newsn

பிக் பாஸ் தமிழ் 8

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. டிராமா, சர்ச்சைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுக்கு பெயர் பெற்ற பிரபலமான ரியாலிட்டி ஷோவாக இது உள்ளது. வெளியுலகத்தைப் பொருட்படுத்தாமல் வீட்டில் தங்குவதற்கு தயாராக இருக்கும் புதிய போட்டியாளர்களுடன் மீண்டும் வந்துள்ளார் பிக்பாஸ். இது வரை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். எப்போதும் போல, போட்டியாளர்கள் தங்கள் பொறுமை, குழுப்பணி, தகவமைப்புத்திறன் ஆகியவற்றை சோதிக்க வடிவமைக்கப்பட்ட பல பணிகளை எதிர்கொள்வார்கள். இவை அனைத்தையும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் கவனித்து வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் 8 எப்படி இருக்கப் போகிறது? பிக் பாஸ் தமிழ் 8 ஆவது சீசனில் தெரிந்த சில முகங்களும், சில புதுமுகங்களும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ரசிகர்களுக்கு பிடித்தவர் யார் ? புதுமையான பணிகள் மற்றும் சவால்கள் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பிக் பாஸ் தமிழ் 8 எப்போது தொடங்கும்? வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை என்ற கணக்கில் 100 நாட்கள் பிக் பாஸ் சீசன் நடக்கும். அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் 8 ஆவது சீசன் அக்டோபர் 6 ம் தேதி தொடங்குகிறது. ஆனால் இந்த முறை தனது படங்களின் தேதி காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகியுள்ளார். அவரின் அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதனால் அவருக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற பெரும் கேள்வி இருந்தது. இந்நிலையில் தான், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் தமிழ் 8 எபிசோடுகளின் அனைத்து அப்டேட்களையும் பெறுங்க

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்கள், தினசரி எபிசோடுகள், எலிமினேஷன்கள் போன்றவற்றின் சமீபத்திய அப்டேட்களைப் பார்க்கவும். பிக் பாஸ் தமிழ் வீட்டில் நடக்கும் சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி திருப்பங்கள் போன்ற அனைத்தையும் பின்தொடருங்கள்.

செய்தி தொகுப்பு

அனைத்தும் காண
...

Bigg boss Tamil: செளந்தர்யா விவகாரம்.. ‘ஏன் ஒரு ஆம்பள அப்படி சொல்லக்கூடாது? ஒரு தலைபட்சமா என்ன? - தீபக் மனைவி பேட்டி

Bigg boss Tamil: பிக் பாஸ் வீட்டிலும் வெளியிலும் மிகப்பெரிய விவாதமாக மாறியது. ஒரு சிலர் தீபக் செய்தது சரிதான் என்று கூறினாலும், இன்னும் சிலர் சௌந்தர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

  • ...
    Shrutika: 'வாழ்க்கையில நான் எடுத்த சூப்பர் முடிவு இது.. மோசமான முடிவு இது'- ஸ்ருதிகா ஷேரிங்ஸ்
  • ...
    Bigg Boss Sivaranjini: ‘தீபக் பத்தி உங்களுக்கு முழுசா தெரியாம.. அருண் மேல அவ்வளவு கோபம் இருந்துச்சு..’- மனைவி பேட்டி!
  • ...
    Bigg Boss Arun & Archana:'அர்ச்சனா ஹார்லி குயின் ஆன கதை.. அருணின் பிளஸ்ஸிங்ஸ்..' அர்ச்சனா, அருண் ஷேரிங்ஸ்
  • ...
    Bigg Boss Archana: ‘அறுபதாம் கல்யாணத்தையே அருணும் அர்ச்சனாவுதான் பண்ணி வச்சாங்கா..’ - அருண் அப்பா பேட்டி

பிரபலமான தலைப்புகள்

பிக்பாஸ் பற்றி மேலும்

அனைத்தும் காண

வெப்ஸ்டோரி

அனைத்தும் காண

புகைப்படதொகுப்பு

சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள்