பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து பறந்து வந்த பிறந்தநாள் பரிசு.. காத்திருந்து கொண்டாடிய டைட்டில் வின்னர்!
பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னரான அர்ச்சனாவிற்கு, தற்போதுள்ள பிக்பாஸ் வீட்டிலிருந்து பிறந்த நாள் வாழ்த்து பறந்துள்ளது தற்போது வைரலாகியுள்ளது.
தமிழ் மக்கள் அனைவருக்கும் மிகவும் பரிட்சையமான நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பேசும் வார்த்தைகளும், அவர்களின் செயல்களும் பலரால் பார்க்கப்படுவதுடன் அது விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகிறது.
ஹாட் டாப்பிக்கான அருண் பிரசாத் வாழ்த்து
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 வீட்டிலிருந்து போட்டியாளர் அருண் கூறிய பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு தான் இப்போதைய ஹாட் டாப்பிக்.
கடந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர், முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து தமிழ்நாட்டு மக்களுக்கு பிரபலமானார். அதற்கு முன்னர் அவர் விஜேவாகவும் பணியாற்றி வந்தார்.
வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தாலும், தன் அதிரடியான பேச்சாலும், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதிலும் மக்களை பெரிதும் கவர்ந்தார். இதன் மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு தாறூமாறாக அதிகரித்தது. இதற்கிடையில், அவரைச் சுற்றி சமீப காலமாக சில வதந்திகள் பரவி வந்தன.
அருண்- அர்ச்சனா காதல்
அதை உறுதி செய்யும் விதமாக சமீபத்திய நிகழ்வுகள் சில உள்ளன. மக்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ள அர்ச்சனா, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அருண் பிரசாத்தை காதலிப்பதாகவும் அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டன.
இந்த சமயத்தில் தான் அர்ச்சனா நேற்று (நவ. 11) அவரது 27வது பிறந்தநாளை மிகவும் மாஸாக கொண்டாடினார். அவர் மெழுகுவர்த்தி பற்ற வைத்து கேக் வெட்டிய ஸ்டைலைப் பற்றி மக்கள் பேசி வந்துள்ள நிலையில், இப்போது அவர் வெளிப்படையாகவே தனது காதல் உறவு குறித்து அறிவித்துள்ளார்.
காத்திருந்து வாழ்த்து பெற்ற அர்ச்சனா
நேற்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அருண், தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அர்ச்சனா, என் பிறந்தநாள் இந்த வாழ்த்தால் முழுமை பெற்றுள்ளது. இந்த வாழ்த்திற்காக நான் இரவு 1 மணி வரை காத்திருந்தேன். நன்றி கேப்டன் எனத் தெரிவித்துள்ளார்.
லவ் யூ சொல்லி வாழ்த்திய அருண்
அர்ச்சனா பதிவிட்டிருந்தா வீடியோவின், பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக தேர்வாகிய அருண் பேசியிருந்தார். அவர், "ஹாய் ஹர்லி நீ நல்லா இருக்கேன்னு நம்புறேன். நான் நல்லா இருக்கேன். இந்த வாரம் கேப்டனாக இருக்கேன். இன்னைக்கு உன்னோட பிறந்தநாள். பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எப்போதும் நீ சந்தோஷமாக இருக்கனும். சீக்கிரம் கப்போட வந்து உன்னை சந்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னை பார்த்துக்கோ. ஐ லவ் யூ. பாய்" எனப் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து காதலை உறுதிப்படுத்தும் அருண்
இந்த வீடியோவில், அருண் தன் காதலி யார் என்றும், அவரின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், பிக்பாஸ் வீட்டில் அவர் தொடர்ந்து தன் காதல் குறித்து அனைவரிடமும் பேசி வருகிறார். அத்துடன், அர்ச்சனாவே இந்த வாழ்த்தைக் கேட்க காத்திருந்ததாக கூறிய நிலையில் தற்போது இவர்களது காதல் மக்கள் முன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டாபிக்ஸ்