Tamil News
LIVE UPDATES
- இன்று (1-04-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்
- பிரதமர் மோடி பட்டம் வாங்கியது குறித்த தகவல்கள் தெரிவிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரியதாக மத்திய தகவல் ஆணையம் குஜராத் பல்கலைகழகத்துக்கு உத்தரவிட்டது தொடர்பான ஏழு ஆண்டு கால வழக்கை குஜராத் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் டெல்ல முதலமைச்சருக்கு குஜராத் உயர் நீதமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. முன்னதாக மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைகழகம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் உத்தரவுக்கு பின்னர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறைவான படிப்பறிவு கொண்ட பிரதமர் நாட்டுக்கு ஆபத்து. இந்த நாட்டு மக்கள் அவர்களின் பிரதமர் எவ்வளவு படித்திருக்கிறார் என்பதை கூட தெரிந்துகொள்ள உரிமை இல்லையா? அவரது பட்டத்தை நீதிமன்றத்தில் காட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏன்? என்று டுவிட் செய்துள்ளார்.