‘3 வகுப்பில் விவாகரத்து வேதனை.. வாதநோய் படுத்திய பாடு; ஆடியோ லீக் விஷயத்தில் தற்கொலை முடிவு! ஆனா..’ - குமுறிய அன்ஷிதா!
“ஆடியோ லீக் விவகாரத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால், நண்பர் ஒருவர் போன் செய்து பேசியதில் தப்பித்தேன்” - குமுறிய அன்ஷிதா!

‘செல்லம்மா’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை அன்ஷிதா, சக நடிகர் அர்னவ் உடன் இணைத்துப்பேசப்பட்டார். இது அவரது மனைவியான திவ்யாவிற்கும், அவருக்கும் இடையே சலசலப்பை உருவாக்கியது. இந்த சலசலப்பிற்கிடையில், அன்ஷிதா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆனது.
அந்த ஆடியோ சமூகவலைதளங்களில் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. இது அவரது பர்சனல் வாழ்க்கையையும் வெகுவாக பாதித்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம், அர்னவும், அன்ஷிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசனில் களமிறங்கினர்.
இதில் அர்னவ் வெளியேற்றப்பட்ட நிலையில், அன்ஷிதா முடிந்த அளவு தாக்குப்பிடித்து சென்று கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், அன்ஷிதா நேற்று நடந்த கதை சொல்லல் டாஸ்க்கில், தன்னுடைய வாழ்க்கை கதையை பகிர்ந்து இருக்கிறார். அதில், அர்னவ் விஷயத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் பேசி இருக்கிறார்.

