நல்ல வேளை நடிக்க வர வில்லை! ஷாருக்கான் மகனை வாழ்த்திய கங்கனா! எதற்கு தெரியுமா?
ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை அதிகம் பயணிக்காத பாதையில் பயணிக்கிறார்' என நடிகை கங்கனா ரனாவத் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் ஒரு வெப் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்த தொடர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர், கங்கனா ரனாவத் மற்றும் கரண் ஜோஹர் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் அதற்கு எதிர்வினையாக கருத்து தெரிவித்து உள்ளனர். ஆலியா பட், சுஹானா கான், அனன்யா பாண்டே மற்றும் ஷானயா கபூர் ஆகியோரும் ஆர்யன் கானை உற்சாகப்படுத்தி வாழ்த்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் இந்த வாழ்த்து குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஆரியனின் சகோதரி சுகானா வாழ்த்து
இது குறித்தான செய்தியைப் பகிர்ந்து கொண்ட கங்கனா ரனாவத், "திரைப்படக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மேக்கப் போடுவது, உடல் எடையைக் குறைப்பது, பொம்மையாக மாறுவது மற்றும் தங்களை நடிகர்கள் என்று நினைப்பது என நடிக்க வந்து விடுகிறார்கள். நாம் கூட்டாக இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்த வேண்டும், அதுதான் காலத்தின் தேவை. வளங்கள் உள்ளவர்கள் பெரும்பாலும் எளிதான சாலைகளை எடுக்கிறார்கள். கேமராக்களுக்குப் பின்னால் நமக்கு அதிகமான ஆட்கள் தேவை, ஆர்யன் கான் குறைவாக பயணிக்கும் சாலையில் செல்வது நல்லது. ஒரு எழுத்தாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் அவரது அறிமுகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பை மறுபதிவு செய்த கரண் ஜோஹர், ஆரியனையும் டேக் செய்து, "லவ் யூ, ஆர்யன்!!! நான் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன், உங்கள் நம்பமுடியாத தொடரை உலகம் காண காத்திருக்க முடியாது.!!! இது ராக் அண்ட் ரூல் செய்யப் போகிறது!!" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆர்யனின் சகோதரி சுஹானா கான் கூறுகையில், "நிறைய சிரிப்புகள், நாடகம், அதிரடி மற்றும் கொஞ்சம் சிக்கல்-அது எப்போதும் உங்களுடன் இருப்பது போலவே! என்னால் படத்தை பார்க்க காத்திருக்க முடியாது! மிகவும் பெருமை எனக் குறிப்பிட்டுள்ளார்.