அவ்ளோ கோவம்.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள போன எல்லோரையும் அடிச்சுடுவேன்.. கொந்தளித்த ஸ்ருதிகா கணவர்
ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிகாவை கஷ்டப்படுத்துகின்றனர். அதனால் அங்குள்ள போட்டியாளர்களை அடித்துவிடும் அளவிற்கு கோவம் வருகிறது என அவரது கணவர் அர்ஜூன் கூறியுள்ளார்.
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 18வது சீசனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ருதிகா பங்கேற்றுள்ளார். தமிழ் மக்களிடம் இவர் மிகவும் பரிட்சையமான நிலையில், இந்தி பிக்பாஸில் பங்கேற்ற முதல் தமிழர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பிக்பாஸால் பிரபலமான ஸ்ருதிகா
இவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதிதில் அவரது நடவடிக்கைகளையும் பேச்சையும் பலரும் கிண்டல் செய்து வந்தனர். அத்துடன் இவர் மிகவும் போலியானவர். வீட்டில் உள்ளவர்களிடம் நடித்து வருகிறார் என்றனர். பின், அவர் தமிழர் எனவும், அவரது மொழி மற்றும் உச்சரிப்பு குறித்தும் கிண்டல் செய்து வந்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ஹிந்தி பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியிலும் அவர் நல்ல மரியாதையை பெற்றார்.
கர்ஜித்த ஸ்ருதிகா
இதற்கிடையில், ஸ்ருதிகா அவரது காதல் கணவர் அர்ஜூன் தனக்காக அனுப்பிய பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள மாட்டேன் என்பது, வீட்டில் அவர் பேசும் மொழி குறித்து கிண்டலுக்கு உள்ளாகும் போது சீரி எழுந்தது, வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியபோது ஒற்றை ஆளாக நின்று சமாளித்ததுடன், நான் இங்கு மிக்சர் சாப்பிட வரவில்லை என மாஸாக கூறியது, பிக்பாஸ், சல்மான் கான் என அனைவரையும் தமிழ் பேச வைத்தது என இவர் செய்த சம்பவம் ஏராளம்.
தனிமையில் வாடும் ஸ்ருதிகா
ஆனால், சில நாட்களாக ஸ்ருதிகாவை டார்கெட் செய்து பிக்பாஸ் போட்டியாளர்கள் நடந்து கொள்வது போன்று தோன்றுகிறது. ஸ்ருதிகா பிக்பாஸ் வீட்டில் நிறைய அழுகிறார். தனிமையில் உள்ளது போல் இருக்கிறார். இந்த சமயத்தில் தான் ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜூன் பிஹைண்ட் உட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
எல்லோரும் டான் தான்
அந்தப் பேட்டியில், நானும், என் மகனும் ஸ்ருதிகாவைப் பிரிந்து இவ்வளவு நாள் இருந்ததே இல்லை. ஒருவேளை நான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் நிச்சயம் அழுதுவிடுவேன் என்று தான் நினைக்கிறேன். நான் அவளை மிகவும் மிஸ் பண்றேன். மிஸ் பண்ணும் போது நிறைய கண்ணீர் வருது. நான் யாரையோ அடிச்சு டான் ஆகலடா. நான் அடிச்ச 10 பேரும் டான் தான் அப்டிங்குற மாதிரி. அந்த வீட்ல ஸ்ருதிகா சண்ட போடுற ஒவ்வொருத்தரும் டான் தான்.
ஸ்ருதிகா வேணும்னே பண்றாங்க. நடிக்குறாங்க. ஸ்கிரீன்ல தெரியனும்ங்குறதுக்காக பண்றாங்க என வடநாட்டு மக்கள் கமெண்ட் செய்தனர். இதைப் பார்த்த நம் தமிழ்நாட்டு மக்கள், அப்படியே குதிச்சிட்டாங்க. உங்களுக்கு ஸ்ருதிகாவ பத்தி என்ன தெரியும்? நான் காமிக்கிறேன்டா கிளிப்ஸ்ன்னு சொல்லி பதிலுக்கு கமெண்ட குடுத்து அசர வச்சுட்டாங்க.
பயங்கர கோவம் வருது
பிக்பாஸ் வீட்டில் உள்ளவங்கள எல்லாம் பாக்கும்போது கோவமா வரும். அங்க போய் அவங்கள எல்லாம் அடிச்சிடலாம்ன்னு தோனும். எனக்கு ஷில்பா மேல தான் ரொம்ப கோவம், நான் பிக்பாஸ் வீட்டுக்கு போனா அவங்கள பாக்கக் கூடாதுன்னு நெனக்குறேன், நான் அங்க போறதுக்குள்ள அவர் எலிமினேட் ஆகிடணும்.
முதல்ல ஸ்ருதிகாவோட லேங்குவேஜ்ஜ கிண்டல் பண்ணாங்க, இது கொஞ்சம் ஸ்டாராங் ஆனதும் அவளோட பாடி லேங்குவேஜ்ஜ கிண்டல் பண்றாங்க. கல்யாணம் ஆகிடுச்சி, குழந்தை பிறந்திடுச்சி, 35 வயசுக்கு மேல ஆகுது. இப்பவும் எப்படி ஒருத்தரால இப்படி இருக்க முடியும்ன்னும் கேக்குறாங்க. இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்குன்னு அவர் சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களின் நாயகி
பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியாக சினிமாவிற்குள் நடிக்க வந்த அவர் கதாநாயகியாக மக்களிடம் புகழ் பெறவில்லை என்றாலும், பல ஆண்டுகளுக்குப் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னரானார். அந்த நிகழ்ச்சியில் அவர் தன் பேச்சாலும் செய்கையாலும் மக்களை தன்வசம் இழுத்து மக்கள் நாயகி ஆனார்.
டாபிக்ஸ்