இதை எதிர்பார்க்கவே இல்லையே.. பிக் பாஸ் வைத்த பெரிய ஆப்பு.. டபுள் எவிக்க்ஷனில் சிக்கும் போட்டியாளர்கள் யார்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இதை எதிர்பார்க்கவே இல்லையே.. பிக் பாஸ் வைத்த பெரிய ஆப்பு.. டபுள் எவிக்க்ஷனில் சிக்கும் போட்டியாளர்கள் யார்?

இதை எதிர்பார்க்கவே இல்லையே.. பிக் பாஸ் வைத்த பெரிய ஆப்பு.. டபுள் எவிக்க்ஷனில் சிக்கும் போட்டியாளர்கள் யார்?

Aarthi Balaji HT Tamil
Nov 09, 2024 12:16 PM IST

பிக் பாஸ் 8 ஆவது சீசனில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் இந்த முறை டபுள் எலிமினேஷன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் வைத்த பெரிய ஆப்பு.. டபுள் எவிக்க்ஷனில் சிக்கும் போட்டியாளர்கள் யார்?
பிக் பாஸ் வைத்த பெரிய ஆப்பு.. டபுள் எவிக்க்ஷனில் சிக்கும் போட்டியாளர்கள் யார்?

கடந்த சீசனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த முறை சற்று சண்டை சச்சரவுகள் குறைவாக தான் இருக்கிறது. அதனால் பிக் பாஸ் பக்கவாக பிளான் செய்து கடந்த வாரம் ஒரே வழியாக ஆறு வைல்ட் கார்ட்டு என்ட்ரியை இறக்கினார்.

வைல்ட் கார்ட்டு என்ட்ரி

ஷிவகுமார், ராணவ், ரயான், மஞ்சரி, ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். இவர்களின் வரவால் மேலும் பிக் பாஸ் 8 வீடு சூடு பிடித்து இருக்கிறது.

கடந்த வாரம் போட்டியாளர்களின் புது வரவு இருந்த காரணத்தினால் என்னவோ எலிமினேஷன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

நாமினேஷன் பட்டியல்

இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியை தவிர மற்ற போட்டியாளர்களை ஓபன் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூறிவிட்டார். அதில், அருண் பிரசாத், ரஞ்சித், விஷால், தீபக், முத்துக்குமரன், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா,சாச்சனா, ஆர் .ஜே. ஆனந்தி, அன்ஷிதா என 11 பேர் நாமினேஷன் பட்டியலில் சிக்கி இருக்கிறார்கள்.

டபுள் எலிமினேஷன்

இதனிடையே பிக் பாஸ் ஐந்தாவது வாரத்தில் யார் வெளியேறுவார்கள் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வாமாக உள்ளனர். சமீபத்திய வாக்களிப்பு போக்குகளின்படி, 5 வாரத்தில் முத்துக்குமரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

இவர்களில் ஆர். ஜே. ஆனந்தி, சாச்சனா மற்றும் சுனிதா ஆகியோர் குறைவான வாக்குகள் பெற்று இருக்கிறார்கள். கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் இந்த முறை டபுள் எலிமினேஷன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் குறைவான வாக்குகள் பெற்று இருக்கும் ஆர். ஜே. ஆனந்தி, சாச்சனா மற்றும் சுனிதா ஆகிய மூவரில், இருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை ரவீந்தர் சந்திரசேகர், அர்னவ், தர்ஷா குப்தா எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் 8 ஆண்கள், 7 பெண்கள் என வீட்டில் 15 பேர் இருந்தார்கள். வைல்ட் கார்ட் எண்ட்ரி வந்தவுடன் தற்போது 21 பேர் உள்ளனர்.

உலகளவில் அதிக பார்வையாளர்களை கொண்டு, மக்கள் விரும்பும் ரியாலிட்டி ஷோவாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி. சந்தோஷம், கோபம், நட்பு, காதல், நகைச்சுவை, கொண்டாட்டம், துரோகம், போட்டி என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். கடந்த 7 வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல் ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி கொண்டதால் நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

உள்ளதை எந்த ஒளிவு, மறைவும் இல்லாமல் தனக்கே உரிய பாணியில் தொகுத்து வழங்கி கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.