‘குரலை வச்சு அவ்வளவு கிண்டல்.. ஒரே போன் கால்ல 17 லட்சம் காலி.. அப்பா மட்டும் இல்லன்னா.. ‘ - கண்ணீர் வடித்த சவுண்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘குரலை வச்சு அவ்வளவு கிண்டல்.. ஒரே போன் கால்ல 17 லட்சம் காலி.. அப்பா மட்டும் இல்லன்னா.. ‘ - கண்ணீர் வடித்த சவுண்ட்

‘குரலை வச்சு அவ்வளவு கிண்டல்.. ஒரே போன் கால்ல 17 லட்சம் காலி.. அப்பா மட்டும் இல்லன்னா.. ‘ - கண்ணீர் வடித்த சவுண்ட்

Kalyani Pandiyan S HT Tamil
Nov 08, 2024 12:30 PM IST

‘குரல் கிண்டல் முதல் போன் காலில் இழந்த 17 லட்சம் வரை என தன் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டமான சம்பவங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் செளந்தர்யா பகிர்ந்து இருக்கிறார்.

‘குரலை வச்சு அவ்வளவு கிண்டல்.. ஒரே போன் கால்ல 17 லட்சம் காலி.. அப்பா மட்டும் இல்லன்னா.. ‘ - கண்ணீர் வடித்த சவுண்ட்
‘குரலை வச்சு அவ்வளவு கிண்டல்.. ஒரே போன் கால்ல 17 லட்சம் காலி.. அப்பா மட்டும் இல்லன்னா.. ‘ - கண்ணீர் வடித்த சவுண்ட்

குரலால் நடந்த கிண்டல்

அவர் பேசும் போது, “ நான் கடந்த வந்த பாதையை சொல்வதே எனக்கு பெரும் கனவாக இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நான் அவ்வளவு காலம் காத்திருந்து இருக்கிறேன். காரணம் செளந்தர்யா யார் என்பதை வெளியே சொல்ல வேண்டும் என்ற தவிப்பு எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. சின்ன வயதில் இருந்தே என்னுடைய குரல் இப்படித்தான் இருக்கும்.

செளந்தர்யா
செளந்தர்யா

பள்ளியில் இருந்தே என்னுடைய குரல் சார்ந்த கிண்டலை நான் எதிர்கொண்டு வந்திருக்கிறேன். பலர், இப்படிப்பட்ட ஒரு பொண்ணுக்கு, இப்படிப்பட்ட குரலா என்று குறையாக பார்த்தார்கள். அதனால் என்னுடைய குரலை வைத்துக்கொண்டு பேசுவதே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

ஒரே போன் காலில் காலி

அதனால், வாழ்க்கையில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே எனக்கு குழப்பமாக இருந்தது. சினிமா என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஜுனியர் நடிகராகத்தான் நான் இந்தத்திரைத்துறைக்குள் நுழைந்தேன். எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் நான் இந்த இடத்திற்கு வந்துருக்கிறேன்.

செளந்தர்யா
செளந்தர்யா

கிட்டத்தட்ட 8 வருடங்களாக இந்தத்திரைத்துறையில் உழைத்து 17 லட்சம் சம்பாதித்து இருந்தேன் ஆனால் அது ஒரே போன்காலில் காலியாகிவிட்டது. ஆம், மோசடி முறையில் யாரோ அந்தப்பணத்தை அப்படியே சுருட்டி விட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு கூட நான் என்னுடைய அப்பாவிடம் கடன் வாங்கிதான் வந்தேன்.

இது சம்பவம் கடந்த மாதம்தான் நடந்தது. அதன் காரணமாக, நான் அவ்வளவு பெரிய மன அழுத்தத்தில் சிக்கினேன். ஆனால், அதையெல்லாம் கடந்து நான் இந்த இடத்திற்கு வந்துருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய அப்பாதான். ஐ லவ் யூ டாடி” என்று பேசினார். என்னுடைய பணத்தை திருடியவன் மட்டும் என் கையில் கிடைத்தால் நான் அவனை துண்டு துண்டாக வெட்டுவேன்” என்று பேசினார்.

முன்னதாக, ஜாக்குலின் பகிர்ந்த தன்னுடைய வாழ்க்கை கதையையும் இங்கே பார்க்கலாம்.

தூக்கில் தொங்கிய அப்பா

ஜாக்குலின் பேசும் போது, “விஜய் டிவியில் 10 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். என்னுடைய கதையை நான் எங்குமே சொன்னதில்லை. அந்த வகையில் பார்த்தால், இதுதான் நான் யார்? என்னுடைய அம்மா யார்? என்று சொல்வதற்கான இடம் போலிருக்கிறது. மிகவும் சந்தோஷமாக ஜாலியாக சென்று கொண்டிருந்த என்னுடைய வாழ்வில் திடீரென அந்த சம்பவம் நடந்தது. எல்லோருக்கும் அவர்களது அப்பாவின் நினைவு என்பது வெவ்வேறு விதமாக பதிந்து இருக்கும்.

ஆனால், என்னுடைய அப்பாவின் நினைவு எனக்கு அவர் தூக்குக்கயிறில் தொங்கியது போன்றுதான் பதிந்து இருக்கிறது. காரணம், எனக்கு விபரம் தெரிந்து, என்னுடைய அப்பாவை நான் பார்த்த விதம் அப்படியானதுதான். இன்று வரை என்னுடைய அப்பாவின் முகம் எனக்கு அப்படித்தான் நினைவில் இருக்கிறது. அப்பா இறந்த பின்னர் என்னுடைய தாத்தாவிடம் சென்று அம்மா அப்பாவின் நிலத்தைக்கேட்டார். ஆனால் என்னுடைய தாத்தா, என் மகனே இல்லை ஆனதன் பின்னே, உனக்கு ஏன் நிலம் கொடுக்க வேண்டும் என்றார். இதைக்கேட்ட அம்மா தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்று நின்றார்.அங்கிருந்துதான் எங்களுடைய வாழ்க்கை தொடங்கியது என்று நினைக்கிறேன்.

செக்ஸ் டார்ச்சர்

காரணம், என் தாத்தாவிடம் சென்று என் அம்மாவை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதன் பின்னரே, எங்களுக்கான நிலம் கிடைத்தது. இதனைதொடர்ந்து, என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை பாலியல் ரீதியாக ஒருவர் துன்புறுத்தினார். அது எனக்கு தெரிய வந்தும் கூட, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம், என்னுடைய அப்பா என்னை அப்படித்தான் வளர்த்தார்.

ஒரு நாள் நானும் என்னுடைய அம்மாவும் வந்து கொண்டிருந்தோம். என் நண்பரிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபர், என் மீது காரை ஏற்றுவது போல வந்து பயமுறுத்தினார். இறுதியில் நான் அந்த சம்பவத்தை வெளியே சொல்லி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அப்படி செய்தார் என்பது எனக்குத் தெரிந்தது. இதனையடுத்து நான் தைரியமாக காவல்நிலையம் என்று அந்த நபர் குறித்து புகார் செய்தேன்.

அங்கு தொடங்கி, சுப காரியங்களில் என் அம்மாவை முன்னே நிற்கக்கூடாது என்று கூறியவர்கள், அம்மாவை, என்னை சரியாக வளர்க்கவில்லை என்று குற்றம் சாட்டியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கேள்விக்கேட்டேன். ஒரு கட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே நோக்கமாக இருந்தது.

விமானத்தில் பணியாற்றும் பெண்ணாக வேலை பார்த்தேன். பின்னர், விஜய் டிவி நடத்திய நீங்கள் ஆகலாம் விஜய் டிவி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அதில் நான் தேர்வானேன். அதன் பின்னர் என் மீது எனக்கே ஒரு நம்பிக்கை வந்தது. அதன் பின்னர் வாழ்க்கை எதிர்கொள்ளும் தைரியம் இன்னும் அதிகமானது. இப்போது இங்கே இருக்கிறேன். ஆகையால், கணவரையோ அல்லது மனைவியையோ பிரிந்து வாழும் பெற்றோர் கீழ் வளரும் குழந்தைகள் எதை நினைத்தாலும் அதனை அவர்களால் செய்ய முடியும். ஆகையால் மனச விட்றாதீங்க” என்று பேசினார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.