ஒரு மெல்லிசான கோடு.. கோட்டுக்கு அந்தப் பக்கம் நான் நல்லவன்.. பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்தை ஏற்படுத்திய கோடு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரு மெல்லிசான கோடு.. கோட்டுக்கு அந்தப் பக்கம் நான் நல்லவன்.. பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்தை ஏற்படுத்திய கோடு!

ஒரு மெல்லிசான கோடு.. கோட்டுக்கு அந்தப் பக்கம் நான் நல்லவன்.. பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்தை ஏற்படுத்திய கோடு!

Malavica Natarajan HT Tamil
Nov 05, 2024 10:39 AM IST

பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் அணி, பெண்கள் அணி என பிரிக்கப்பட்ட கோட்டால் தற்போது வீட்டில் பிரச்சனை வெடித்துள்ளது. இதைப் பயன்படுத்தி பெண்கள் அணியினர் சாப்பிடாமல் இருக்க முடிவு செய்துள்ளனர்.

ஒரு மெல்லிசான கோடு.. கோட்டுக்கு அந்தப் பக்கம் நான் நல்லவன்.. பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்தை ஏற்படுத்திய கோடு!
ஒரு மெல்லிசான கோடு.. கோட்டுக்கு அந்தப் பக்கம் நான் நல்லவன்.. பிக்பாஸ் வீட்டில் பஞ்சாயத்தை ஏற்படுத்திய கோடு!

பரப்பில் பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக 6 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தது முதலே சற்று அமைதியக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் சூடு பிடிக்கத் தொடங்கியது. வீட்டிற்குள் நுழைந்தது முதலே புதுப்புது டாஸ்க், முதல் ஓபன் நாமினேஷன் என வீடே ரெண்டுபட்டு கிடைக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இன்று நடக்கும் சண்டை குறித்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

கோடால் மீண்டும் வந்த சண்டை

பிக்பாஸ் வீட்டிற்குள் ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டு அணிகளாக கோடு கிழித்து பிரிக்கப்பட்டுள்ளது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், இன்று போட்டியாளர்களுக்குள் கோட்டைத் தாண்டி செல்வது தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

வீடியோவில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் பார்த்தால், ஆண்கள் அணியினர் பெண்கள் அணியினரை வீட்டில் கிழிக்கப்பட்டிருக்கும் கோட்டைத் தாண்டி வரக்கூடாது எனக் கூறிவருவது தெரிகிறது. ஆண்கள் அணியின் பக்கம் தான் சமையலறை, தண்ணீர் போன்றவை இருக்கும் நிலையில், இந்த விவாதம் இரு அணிகளுக்குள்ளும்

வாக்குவாதம் செய்யும் ஆண்கள் அணி

பேப்பரில் கோட்டைத் தாண்டி வருவதற்கான எந்த தகவலும் இல்லாததால், பெண்கள் அணியினர் பிக்பாஸ் வீட்டிலுள்ள ஆண்கள் அணிப் பக்கம் வரக்கூடாது என்றும், பெண்கள் அணிக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் விவாதித்து வருகின்றனர்.

இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு அணிகளும் தங்கள் வீட்டில் ஆலோசனை செய்து வந்துள்ளனர். அப்போது, கோட்டைத் தாண்டி வருவதற்கு நாம் ரூல்ஸ் போடுவதில் என்ன தவறு இருக்கிறது என தர்ஷிகா கேள்வி எழுப்புகிறார்.

அதே சமயம், நாம் 30 வினாடிகளில் கூறிய எந்த காரணங்களும் அவர்களுக்கு திருப்திகரமாக அமையவில்லை என ஆண்கள் அணியினர் கூறுவதாக மஞ்சரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 30 வினாடிகளில் கோட்டிற்கு அந்தப் பக்கம் வந்துவிட்டு, உடனே திரும்ப வேண்டும் எனக் கூறியது எனக்கும் என் டீமிற்கும் உடன்பாடு இல்லை என ஆண்கள் அணி சார்பில் அருண் கோபமாக கூறியுள்ளார்.

நடப்பதை சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் பெண்கள்

நடக்கும் சம்பவங்களை எல்லாம் சேர்த்து வைத்து பேசிய சுனிதா, கிச்சனுக்கு போக முடியாது என்றால் நம்மால் சமைக்க முடியாது, அதனால் பெண்கள் அணியினர் சாப்பிடாமல் இருந்து விடலாம் எனக் கூறியுள்ளார். இதனால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நடக்கும் இந்த கருத்து மோதலால் பிக்பாஸ் வீட்டில் அடுத்த நடக்கப் போவது என்ன என அனைத்து தரப்பிலிருந்தும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

நாமினேஷனில் இருந்த தப்ப முயற்சி

முன்னதாக, பிக்பாஸ் சீசன் 8ல் முதல்முறையாக இன்று ஓபன் நாமினேஷன் நடந்தது. அதில், வைல்டு கார்டு போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை நாமினேட் செய்தனர்.

இதையடுத்து, இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்ற போட்டியாளர்களின் பெயர்களை பிக்பாஸ் அறிவித்துள்ளது. அதில், கிட்டத்தட்ட பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்தப் பட்டியலில் ஜாக்குலின், விஷால், ரஞ்சித், தீபக், அருண், முத்து, சாச்சனா, பவித்ரா, ஆனந்தி, அன்ஷிதா, சுனிதா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது . இதனால், இந்தப் போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்து தங்கள் பெயரை காத்துக் கொள்ள ஏதேனும் முயற்சி எடுத்து பிக்பாஸ் வீட்டின் ஆட்டத்தை சூடு பிடிக்க வைப்பர் எனத் தெரிகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.