சொந்தமா யோசிக்கத் தெரியாது! விளையாட்டில் சிக்கி சின்னா பின்னமாகிறார்.. அடுக்கடுக்காக வரும் புகார்கள்
பிக்பாஸ் வீட்டில் யார் ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதாக்குகிறார், யார் எல்லோரிடமும் சுலபமாக ஏமாந்து விடுகிறார் என்பசது குறித்து போட்டியாளர்கள் விவாதித்து வருகின்றனர்.
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான் என்ற காலம் இருந்தது. ஆனால், தற்போது நடந்துவரும் 8வது சீசனில் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போட்டிகள் மும்மரமாக இல்லை. அதுமட்டுமின்றி, விஜய் டிவி மட்டுமல்லாது, பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேர நேரடியாக ஒளிபரப்பாகி வருவதால், பலரும் இந்த நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும் போது பார்த்து வந்து தங்கள் கருத்தகளைக் கூறி வருகின்றனர்.
விமர்சிக்கும் விஜய் சேதுபதி
இந்நிகழ்ச்சியைப் பார்த்து வாராவாரம் போட்டியாளர்களை சந்தித்து வரும் விஜய் சேதுபதியும் போட்டியாளர்களையும் அவர்கள் விளையாடும் முறையையும் பலமுறை விமர்சித்துள்ளார். இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டின் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக தீபாவளி போனஸாக 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு சென்ற நிமிடத்திலிருந்து விளையாட்டின் போக்கையே மாற்றி விட்டுள்ளனர்.
போட்டியின் போக்கை மாற்றிய வைல்டு கார்டு
வெளியில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள் தங்களைப் பற்றி கூறுவது உண்மை என நம்பி, போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டின் முறையை மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு புதிய டாஸ்க் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.
அந்த வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யார் மற்றவரின் மனதை எளிதில் மாற்றுகின்றனர். யார் மற்றவர்களின் பேச்சால் எளிதில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கின்றனர் என்பதை போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அவர்களின் கருத்துகளைக் கூற வேண்டும் என பிக்பாஸ் அறிவித்துள்ளது.
இன்ஃபுளுயன்ஸ் செய்யும் போட்டியாளர்கள்
இந்த டாஸ்க் குறித்து தனது கருத்தைத் தெரிவித்த தீபக், ரியாவும் மஞ்சரியும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை அதிகளவு தங்களின் பேச்சால் எளிதில் மனம் மாற்றுகின்றனர் எனக் கூறினார். இதையடுத்து பேச வந்த ரயான், மஞ்சரியிடம் தங்களிடம் உள்ள சரியானவற்றையே திரும்பத் திரும்ப கூறினால் அது எல்லோருக்கும் சரியாகாது எனக் கூறியுள்ளார்.
கடுமையாக பேசும் ரியா
பின்னர் பேச வந்த வர்ஷினி, ரியா மற்றவர்களிடம் மிக் கடுமையாக பேசுகிறார். ஆனால், அதை அவர்களின் நலனுக்காக சொல்வது போல நம்மை நம்ப வைக்கிறார் என குற்றம்சாட்டினார்.
எளிதில் ஏமாறும் சத்யா
அதன்பிறகு வந்த சௌந்தர்யா, சத்யா யார் என்ன சொன்னாலும் எளிதில் அதை ஏற்றுக் கொள்வதுடன் அதற்கு தகுந்தாற்போல செயல்படுகிறார். அவருக்கு சொந்தமாகவே யோசிக்கத் தெரியவில்லை எனக் கூறினார்.
பின்னர் பேசிய ஜாக்குலின், ராணவ்வை எளிதில் ஏமாற்றி விடலாம் எனக் கிண்டலடித்துள்ளார். அதையடுத்து வந்த மஞ்சரி, ராணவ்விடம் சொந்தமாக எந்தக் கருத்தும் இல்லை எனக் குற்றம் சாட்டினார்.
சிக்கி சின்னா பின்னமாகும் ராணவ்
தொடர்ந்து பேசிய முத்துக் குமரன், ராணவ் பெண்கள் அணியில் சிக்கிக் கொண்டு, விளையாட்டில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் சிக்கி சின்னா பின்னமாகிறார் எனத் தோன்றுவதாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், இன்று நிச்சயம் இந்த டாஸ்க்கால் பிக்பாஸ் வீட்டில் நிச்சயம் கலவரம் ஏற்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
டாபிக்ஸ்