இவங்க எல்லாம் எதுக்கு விளையாட வரணும்.. வைல்டு கார்டு போட்டியாளர்களை வச்சு செய்யும் போட்டியாளர்கள்
பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கும் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கும் வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் சுவாரசியம் கூட்டுவதற்காக கடந்த 3ம் தேதி தீபாவளி போனஸாக 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு சுற்று மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்கள், நிகழ்ச்சி ஆரம்பித்து 25 நாட்களைக் கடந்த பின் வந்ததால், அவர்கள் வீட்டில் உள்ள பழைய போட்டியாளர்களுடன் நெருக்கமாக சில காலம் எடுத்துக் கொள்ளும் என்பது தெரிந்ததே.
நெருடலைத் தரும் போட்டியாளர்கள்
ஆனால், இங்கோ வெளியில் இருந்து வந்த போட்டியாளர்கள் வீட்டில் உள்ளவர்கள் எடுக்கும் முடிவில் தொடர்ந்து குறை சொல்வதும், தங்களது கருத்தை பல இடங்களில் மிகவும் அழுத்தமாக பதிவு செய்வதும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு சில நெருடலைத் தருகிறது. இதை போட்டியாளர்கள் பெரிது படுத்தாமல் இருந்த நிலையில், இன்று அது வெடித்துள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.