எங்களைப் பற்றி

1924ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் வழியை பின்பற்ற தொடங்கியபோது, எச்டி மீடியா நிறுவனம் தொடங்கப்பட்டது.

இன்று இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஊடகங்களில் ஒன்றாக எச் மீடியா உள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் (ஆங்கிலம்) மற்றும் ஹிந்துஸ்தான் (ஹிந்தி - ஹிந்துஸ்தான் மீடியா வென்சர்ஸ் லிமிடெட் துணை நிறுவனம்) ஆகியவற்றின் ஆசிரியர் குழு உயர்ந்த தரம், புதுமை, நேர்மையான செய்திகளை வழங்குவதற்கான வழியை பின்பற்றுகிறார்கள்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் தவிர, எச்டி மீடியா நிறுவனம் மின்ட் என்ற பெயரில் தேசிய வணிக இதழ் ஒன்றையும் வெளியிடுகிறது. மின்ட் இதழின் நிறுவனங்கள் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, சண்டிகர், புணே, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் அமைந்துள்ளது. மின்ட் இந்தியாவின் இரண்டாவது பெரிய வணிக இதழாக திகழ்கிறது.

மின்னனு ஊடகவியலிலும் எச்டி மீடியா தனது இருப்பை வெளிக்காட்டியுள்ளது. எச்டி மீடியா ஃபிவர் என்ற பெயரில் வானொலியாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒலிக்கிறது. நாட்டில் வளர்ந்து வரும் வானொலி நெட்வொர்காக திகழும் எச்டி மீடியா ஃபிவர் டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், கான்பூர், ஆக்ரா, கோரக்பூர், அலகாபாத், அலிகார்க், பைரெய்லீ ஆகிய நகரங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இ-என்டர்பைரஸின் ஒரு பகுதியாக எச்டி மீடியா இண்டர்நெட் பிஸினஸ் இயங்குகிறது. இதன் மூலம் HindustanTimes.com மற்றும் LiveMint.com ஆகிய இணையத்தளங்களை இயக்குகிறது.

தங்களது படிப்பு, தகுதிக்கு உரிய வேலையை தேடுபவர்களின் வசதிக்காக Shine.com என்ற இணையதளத்தை செயல்படுத்துகிறது. இதன் தனித்துவமான வடிவம், பயன்பாடு ஆகியவற்றால் வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது.

DesiMartini.com என்ற இணையதளம் மூலம் பொழுதுபோக்கு விஷயங்களை, குறிப்பாக சினிமா தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்குகிறது.

எங்களது நிறுவனத்தின் சார்பில் www.httampus.com என்ற பெயரில் கல்வி தொடர்பான இணையத்தளம் இயங்குகிறது. இந்த தளத்தின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது உயர் கல்வியை தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது.

ஹிந்துஸ்தான் டைமஸ் இணையத்தளம் தற்போது அடுத்தகட்டமாக பிராந்திய மொழிகளின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பஞ்சாபி, மராத்தி, வங்காளம், தெலுங்கு மொழிகளுக்கு என தனித்தனியாக இணையத்தளத்தை கொண்டுள்ளது. தற்போது தமிழ் மொழியிலும் இதேபோல் எச்டி தமிழ் என்ற பெயரில் இயங்குகிறது.