வழியனுப்ப வந்தவரை வழி அனுப்பி வைத்த பிக்பாஸ்.. முதல் வாரத்திலேயே எண்டு கார்டு போட்டு முடித்து விடப்பட்ட போட்டியாளர்!
பிக்பாஸ் வீட்டின் 6வது வாரத்தில், பெண்கள் அணியைச் சேர்ந்த ரியா தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இம்முறை கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய்சேதுபதி களமிறங்கி இருக்க, அவருக்கே உரித்தான பாணியில் ஆரம்பித்த முதல் நாளிலேயே கவுண்டர்களை அடுக்கி, தன்னை நோக்கி வந்த பால்கள் அனைத்தையும் சிக்சர்களாக பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார்.
வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக்பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வந்தனர். இதனால், பிக்பாஸ் மீதான விருப்பம் மக்கள் மத்தியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.
6வது வார நாமினேஷன்
சுவாரசியமே இல்லாத பிக்பாஸ் போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக பிக்பாஸ் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும். அந்த வகையில், 6வது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, மஞ்சரி, ராணவ், ரஞ்சித், ரியா, சாச்சனா, சத்யா, சிவக்குமார், சொந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி ஆகியோர் இடம் பெற்றனர்.