பிக்பாஸை உடனே நிறுத்துங்க! எல்லாமே கெட்டுப் போச்சு.. ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி இளம் தலைமுறையினரை சீரழிப்பதாகக் கூறி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், கோலாகலமாக ஆரம்பமானது.
டஃப் கொடுத்த விஜய் சேதுபதி
இந்த முறை, நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொகுப்பாளராக இருந்த நடிகர் கமல் ஹாசன் மாற்றப்பட்டு, நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கினார்.
இவர், புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே போட்டியாளர்களுக்கு கடுமையான டஃப் கொடுத்தார் விஜய் சேதுபதி.
ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்
இந்த சீசன், சந்தோஷமாகவும் அழுகையாகவும் கோபமாகவும் வன்மத்துடன் சுமார் 30 நாட்களை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும், போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்க வைல்டு கார்டு என்ட்ரியாக 6 போட்டியாளர்களையும் பிக்பாஸ் இறக்கியுள்ளது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விரைவாக தடை செய்ய வேண்டுமெனக் கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பிக்பாஸ் தனது முதல் சீசன் ஒளிபரப்பான சமயத்தில் இருந்தே கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கிறது. நம் பண்பாடுக்கு எதிராக இந்நிகழ்ச்சி உள்ளது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிக்பாஸை தடை செய்ய வேண்டும்
அதுமட்டுமின்றி, தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தடை செய்ய வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியினால் இளம் தலைமுறையினர் சீர்கெட்டுப் போகின்றனர். எனவே, சினிமாவில் இருப்பதை போன்று தொலைக்காட்சிகளுக்கும் தணிக்கை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
மக்கள் வரவேற்பு பெறாத சீசன்
இந்த சமயத்தில், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான் என்ற காலம் இருந்தது. ஆனால், தற்போது நடந்துவரும் 8வது சீசனில் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போட்டிகள் மும்மரமாக இல்லை. அதுமட்டுமின்றி, விஜய் டிவி மட்டுமல்லாது, பிக்பாஸ் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேர நேரடியாக ஒளிபரப்பாகி வருவதால், பலரும் இந்த நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும் போது பார்த்து வந்து தங்கள் கருத்தகளைக் கூறி வருகின்றனர்.
பல வேளைகளில் இறங்கிய விஜய் டிவி
இந்நிகழ்ச்சியைப் பார்த்து வாராவாரம் போட்டியாளர்களை சந்தித்து வரும் விஜய் சேதுபதியும் போட்டியாளர்களையும் அவர்கள் விளையாடும் முறையையும் பலமுறை விமர்சித்துள்ளார். இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டின் சுவாரசியத்தைக் கூட்டுவதற்காக தீபாவளி போனஸாக 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
அவர்கள் அங்கு சென்ற நிமிடத்திலிருந்து விளையாட்டின் போக்கையே மாற்றி விட்டுள்ளனர். இப்படி, விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலமாக்க பல வேலைகளில் இறங்கியுள்ள நிலையில் தூத்துக்குடியில் பிக்பாஸிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்வைக்கின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்