‘ 35 வயசுல சிங்களா இருப்பேனா?’ - நடிகையுடன் காதலில் இருப்பதை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டா தனது புதிய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது காதல் பற்றி பேசினார்.

விஜய் தேவரகொண்டா தற்போது சாஹிபா என்ற ஆல்பம் பாடலில் நடித்து உள்ளார். இந்த இசை வீடியோவை விளம்பரப்படுத்தும் போது அவர் காதல், உறவுகள் மற்றும் திருமணம் குறித்து பேசினார்.
கர்லி டேல்ஸ் உடனான ஒரு நேர்காணலில், வழக்கமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எதையும் சொல்லாமல் இருக்கும் விஜய் தேவரகொண்டா முதல் முறையாக அதை உடைத்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
எதிர்பார்ப்புகளுடன் வந்த காதல்
அவர் கூறுகையில்," காதலிப்பது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். காதலிக்கவும் தெரியும். அது நிபந்தனையற்றதா என்று தெரியவில்லை. ஏனென்றால் என் காதல் எதிர்பார்ப்புகளுடன் கலந்தது. காதலில் நிபந்தனைகள் இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். எனக்கு 35 வயதாகிறது. நான் சிங்கிளாக இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் காதலிக்கிறேன். ஒரு சக நடிகருடன் டேட்டிங் செய்துள்ளேன் “ என்றார்.