வேண்டவே வேண்டாம்.. விவகாரத்து வழக்கில் உறுதி.. நேரில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா விடாப்பிடி.. நவ.27ல் தீர்ப்பு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வேண்டவே வேண்டாம்.. விவகாரத்து வழக்கில் உறுதி.. நேரில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா விடாப்பிடி.. நவ.27ல் தீர்ப்பு

வேண்டவே வேண்டாம்.. விவகாரத்து வழக்கில் உறுதி.. நேரில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா விடாப்பிடி.. நவ.27ல் தீர்ப்பு

Marimuthu M HT Tamil
Nov 21, 2024 02:22 PM IST

வேண்டவே வேண்டாம்.. விவகாரத்து வழக்கில் உறுதி.. நேரில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா விடாப்பிடி.. நவ.27ல் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

வேண்டவே வேண்டாம்.. விவகாரத்து வழக்கில் உறுதி.. நேரில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா விடாப்பிடி.. நவ.27ல் தீர்ப்பு
வேண்டவே வேண்டாம்.. விவகாரத்து வழக்கில் உறுதி.. நேரில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா விடாப்பிடி.. நவ.27ல் தீர்ப்பு

தனுஷ்- ஐஸ்வர்யா திருமணம்:

நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஷ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என்ற இரு மகன்களும் உள்ளனர். இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அதனைத்தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இருவரும் மனம் ஒத்து பிரியப்போவதாக அறிவித்து இருந்தனர்.

இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்தாலும் தனது மகன்களின் பள்ளி நிகழ்வுகளுக்கு இருவரும் ஆஜர் ஆகி அவர்களை பிரிவு பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொண்டனர். இந்நிலையில் பரஸ்பர முறையில் இருவரும் பிரிவதாக விவகாரத்துக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர்.

இவர்கள் இருவரும் பிரிவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் இவர்களின் பிரிவினை தவிர்க்க இவர்களது நண்பர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அது எந்தவித பலனையும் அளிக்கவில்லை எனவும் தெரியவந்தது.

நீதிமன்றம் சென்ற வழக்கு:

இருவரின் உறுதியான முடிவாக விவாகரத்து இருந்தது. இதன் காரணமாக 2024ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்துகோரி பரஸ்பரம் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், 'கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற எங்களது திருமணம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்றும் கோரியிருந்தனர். இவர்கள் தாக்கல் செய்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஆஜராகாத காரணத்தால், இந்த வழக்கை 3 முறை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சில நாட்களாகவே, சமூக வலைதளங்களில் இருவரும் பரஸ்பரமாக செல்லும் நிலையில், ரஜினி நடித்த வேட்டையன் படத்தை குடும்பத்துடன் அனைவரும் ஒரே தியேட்டரில் பார்த்து ரசித்தனர். மேலும், விவாகரத்து வழக்கில் ஐஸ்வர்யாவும், தனுஷும் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வருகின்றனர். இவர்களின் இந்தச் செயல்கள் மீண்டும் குடும்ப வாழ்க்கையில் இணைவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

மாறிய முடிவு.. மீண்டும் பழைய நிலை:

கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த தனுஷ், தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து வாழத் தயாரானதாகவும் ஊடகங்கள் கூறின. மேலும், இதுதொடர்பாக இருவரும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் சந்தித்து பேசினர் எனவும் சொல்லப்பட்டது.

ஒருபுறம் தனுஷின் ரசிகர்கள் தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இணையப்போவது உறுதியாகி உள்ளது எனக்கூறி வந்தனர்.

இந்நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிபதி சுபா தேவி முன்னிலையில், இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் வரும் நவம்பர் 27ல் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

சினிமாவில் மும்முரமாக இருக்கும் தனுஷ்:

தனுஷ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படம் 100 கோடி ரூபாய் தாண்டி வசூலைப் பெற்ற நிலையில், ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும், ’இட்லிக் கடை’ எனும் படத்தையும் இயக்கி வருகிறார். இட்லிக்கடை படத்தில் நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் தற்போது வெளியாக இருக்கும் ’குபேரா’ படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்குத் தயாராகி இருக்கிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.