ஏஆர் ரகுமானிற்கு கிடைத்த மற்றொரு மகுடம்! ஆடு ஜீவிதம் படத்திற்கான சர்வதேச விருது!
A.R ரஹ்மான், ஆடுஜீவிதம்: The Goat Life படத்திற்காக ஹாலிவுட் மியூசிக் மீடியா இண்டிபெண்டன்ட் ஃபிலிம் (வெளிநாட்டு மொழி) பிரிவில் சிறந்த பின்னணி இசைக்காக 2024 ஆம் ஆண்டுக்கான விருதை பெற்றுள்ளார்.

A.R ரஹ்மான், ஆடுஜீவிதம்: The Goat Life படத்திற்காக ஹாலிவுட் மியூசிக் மீடியா இண்டிபெண்டன்ட் ஃபிலிம் (வெளிநாட்டு மொழி) பிரிவில் சிறந்த பின்னணி இசைக்காக 2024 ஆம் ஆண்டுக்கான விருதை பெற்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ரஹ்மான் சார்பில் இந்த விருதினை அப்படத்தின் இயக்குனர் பிளெஸ்ஸி பெற்றுக்கொண்டார்.
ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது
ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுகள் (HMMA) நவம்பர் 21, வியாழன் அன்று திரைப்படம் மற்றும் அனைத்து இசை மீடியா வகைகளுக்கான வெற்றியாளர்களை அறிவித்தது. ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் எமிலியா பெரெஸ் ஆகியோர் தலா மூன்று விருதுகளை வென்றனர். வைல்ட் ரோபோவும் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
ஆடு ஜீவிதம்
ஆடுஜீவிதம், தி கோட் லைஃப் என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் ஆகும். மலையாளத் திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி திரைக்கதை எழுதியதுடன், இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் அரபு மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் படத்தின் கதாபாத்திரங்கள் பேசியிருப்பார்கள். இப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆடு ஜீவிதம் என்ற பெயரில் எழுத்தாளார் பென்யாமின் எழுதிய மலையாள நாவலின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். மேலும் இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.