பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சண்டைக் கோழி.. ட்விட்ஸ் மேல ட்விஸ்ட் கொடுத்து சுனிதாவை தேடி வந்த ஆப்பு!
பிக்பாஸ் வீட்டின் 5வது வாரத்தில், பெண்கள் அணியைச் சேர்ந்த சுனிதா தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இம்முறை கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய்சேதுபதி களமிறங்கி இருக்க, அவருக்கே உரித்தான பாணியில் ஆரம்பித்த முதல் நாளிலேயே கவுண்டர்களை அடுக்கி, தன்னை நோக்கி வந்த பால்கள் அனைத்தையும் சிக்சர்களாக பறக்க விட்டுக்கொண்டிருக்கிறார்.
24 மணி நேரத்திற்குள் எலிமினேஷன்
இந்நிலையில், போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திற்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சாச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின் 3 நாட்கள் மக்களுடன் மக்களாக இந்த விளையாட்டை பார்த்து வந்த சாச்சனா மீண்டும் அதிரடியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
2 ஆண் போட்டியாளர்கள் வெளியேற்றம்
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களால் ஃபேட் மேன் ரவீந்தர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார். இந்நிலையில், ஒரு வாரமாக அவர் செய்த சேட்டைகளின் காரணமாகவும், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டின் 2வது வாரத்தில், அர்னவ் பெண்கள் அணியினரால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின், அவர் தனது எலிமினேஷனுக்கு ஆண்கள் அணியினர் தான் காரணம். அவர்கள் ஜால்ரா அடித்து, ஒருவர் முதுகிற்கு பின் மற்றொரவர் ஒழிந்து கொள்கின்றனர் என மிகக் கடுமையாக விமர்சித்திருப்பார்.
3ம் வாரத்தில் பெண் போட்டியாளர் வெளியேற்றம்
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் 3வது வாரத்தில், பெண்கள் அணியைச் சேர்ந்த தர்ஷா குப்தா வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷா விஜே விஷாலுக்கு சில அறிவுரைகளை வழங்கிச் சென்றார்.
கடந்த சீசனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த முறை சற்று சண்டை சச்சரவுகள் குறைவாக தான் இருக்கிறது. அதனால் பிக் பாஸ் பக்கவாக பிளான் செய்து கடந்த வாரம் ஒரே வழியாக ஆறு வைல்ட் கார்ட்டு என்ட்ரியை இறக்கினார்.
வைல்ட் கார்ட்டு என்ட்ரி
ஷிவகுமார், ராணவ், ரயான், மஞ்சரி, ரியா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். இவர்களின் வரவால் மேலும் பிக் பாஸ் 8 வீடு சூடு பிடித்து இருக்கிறது.
கடந்த 4வது வாரம் போட்டியாளர்களின் புது வரவு இருந்த காரணத்தினால் என்னவோ எலிமினேஷன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
நாமினேஷன் பட்டியல்
இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியை தவிர மற்ற போட்டியாளர்களை ஓபன் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் கூறிவிட்டார். அதன் அடிப்படையில், அருண் பிரசாத், ரஞ்சித், விஷால், தீபக், முத்துக்குமரன், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா,சாச்சனா, ஆர் .ஜே. ஆனந்தி, அன்ஷிதா என 11 பேர் நாமினேஷன் பட்டியலில் சிக்கி இருக்கிறார்கள்.
டபுள் எலிமினேஷன்
இதனிடையே பிக் பாஸ் ஐந்தாவது வாரத்தில் யார் வெளியேறுவார்கள் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வாமாக உள்ள நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளது என பல தகவல்கள் பரவியது. இதனால், பிக்பாஸ் வீட்டின் நாமினேஷன் பட்டியலில் குறைவான வாக்குகள் பெற்று இருக்கும் ஆர். ஜே. ஆனந்தி, சாச்சனா மற்றும் சுனிதா ஆகிய மூவரில், இருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வெளியேறிய பெண் போட்டியாளர்
இந்நிலையில், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல், அனைவரிடமும் சண்டை போட்டு வருவதாக பெண்கள் அணியினரே குறை சொல்லிய சுனிதா தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் நாமினேஷன் பட்டியலில் குறைவான இடத்தை பிடித்ததால், எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கூறப்பட்டு வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து சுனிதா மட்டும் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாபிக்ஸ்