மீண்டும் விஜயுடன் இணையும் வில்லி நடிகை! வெளியான தகவல் உண்மையா?
தளபதி விஜயின் கடைசி படமான தளபதி 69 ஆவது படத்தில் மேலும் ஒரு நடிகை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சதுரங்க வேட்டை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அ. வினோத். அப்படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இதுவரை இயக்கியுள்ளார். இவரது அணைத்து படங்களும் திருட்டு, பணம் சார்ந்த கார்ப்பரேட் சுரண்டல் போன்ற கருக்களை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட படங்களாக இருந்தன. இவரது இயக்கத்தில் தற்போது விஜய் அவருடைய 69வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருக்கிறார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரேமலு புகழ் நடிகை மமிதா பைஜூ ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படமே விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல கோடி வசூலை எதிர்ப்பார்க்கும் படக்குழு
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கி விட்டார். அதன் மாநாட்டையும் வெற்றி கரமாக முடித்து விட்டார். இந்த நிலையில் விஜய் இப்படத்திற்கு பின் படங்களில் நடிக்கப் போவதை நிறுத்தப் போவதாகவும் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக இப்படம் வெளியாகி அதிக வசூலை பெரும் என படக்குழுவினர் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான தி கோட் திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூல் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.