'கால வச்சா அது கட் ஆகிடும் முத்து' எச்சரித்த அருண்.. ஸ்ட்ராங்கா பேசி சொதப்பும் சாச்சனா.. பற்றி எரியும் பிக்பாஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'கால வச்சா அது கட் ஆகிடும் முத்து' எச்சரித்த அருண்.. ஸ்ட்ராங்கா பேசி சொதப்பும் சாச்சனா.. பற்றி எரியும் பிக்பாஸ்

'கால வச்சா அது கட் ஆகிடும் முத்து' எச்சரித்த அருண்.. ஸ்ட்ராங்கா பேசி சொதப்பும் சாச்சனா.. பற்றி எரியும் பிக்பாஸ்

Malavica Natarajan HT Tamil
Nov 05, 2024 01:02 PM IST

சாச்சனாவின் பேச்சை வைத்து முத்துக் குமரனுக்கு பெண்கள் அணி விரித்த வலையில் சிக்காமல் இருக்குமாறு அருண் முத்துவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

'கால வச்சா அது கட் ஆகிடும் முத்து' எச்சரித்த அருண்.. ஸ்டாராங்கா பேசி சொதப்பும் சாச்சனா.. பற்றி எரியும் பிக்பாஸ்
'கால வச்சா அது கட் ஆகிடும் முத்து' எச்சரித்த அருண்.. ஸ்டாராங்கா பேசி சொதப்பும் சாச்சனா.. பற்றி எரியும் பிக்பாஸ்

விளையாட்டை வினையாக்கிய ஆனந்தி

அப்போது, அவர்களிடம் சிரித்து சிரித்து பேசிய ஆனந்தி, பெண்கள் வீட்டிற்குள் வந்த உடனே, முத்துக் குமரன் பெண்களை மிக கேவலமாக சித்தரிப்பது போல் பேசி, பிரச்சனையை பெரிதாக்குவார். இதை அறிந்த முத்துக் குமரன் அவர்களிடம் விளையாட்டாகத் தான் இப்படி செய்தோம், நீங்களும் அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி, விளையாட்டாக பேசியதை நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டால் மன்னித்து விடுங்கள் எனக் கூறியிருப்பார்.

வாயை விட்ட சாச்சனா

அப்படி இருந்தும் ஆனந்தி இதனை விடாமல், பவித்ரா, அன்ஷிதா, சாச்சனா ஆகியோரிடம் பேசிக் கொண்டிருப்பார். இந்த சமயத்தில் வேண்டுமென்றே பேசிய சாச்சனா, முத்து பெண்களை வேண்டுமென்றே தான் மட்டம் தட்டுகிறார். அவர், வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்த பின் அவர்களது பேச்சைக் கேட்டு நடந்துகொள்ளத் தொடங்கியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்த பழைய முத்துக் குமரன் இப்போது இல்லை, அவரது செயல்கள் எல்லாம் மாறிவிட்டது என தன் வாய்க்கு வந்ததை எல்லாம் கூறியிருப்பார்.

பதிலடி கொடுத்த பவித்ரா

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பவித்ரா, சாச்சனாவிடம் நேரடியாகவே பதிலளித்தார். முத்து உன்னை சொந்த தங்கை மாதிரி பார்ப்பதால் தான் உன்னிடம் அக்கறை எடுத்து, சிலவற்றை சொல்கிறார். அதை அவரிடமிருந்து வாங்கி வந்து, இப்படி பொது வெளியிலேயே அவரைப் பற்றி பேச உனக்கு ஒரு மாதிரியாக இல்லையா? நீ ஸ்கோர் செய்ய முத்துவை பயன்படுத்துவதாக முகத்திற்கு நேராகவே பவித்ரா கேட்டவுடன் சாச்சனாவால் என்ன செய்வது என்றே தெரியாமல் அமைதியாவார்.

தன்னை காப்பாற்ற போராடும் சாச்சனா

இந்நிலையில், நேற்று தான் பேசியது வேறு யார் மூலமோ முத்துக் குமரனுக்கு தெரிவதற்கு பதிலாக தாமே வந்து சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும் எனக் கூறி, நேற்று அவர் பேசியவற்றை முத்துக் குமரனிடம் கூறினார். ஆனால், அதற்கு அவர் மிகத் தெளிவான பதிலை வழங்கியிருப்பார்.

பெண்கள் ஆரம்பித்த கலவரம்

இந்நிலையில், சாச்சனா முத்துக் குமரனிடம் பேசியது பெண்கள் வீட்டில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சாச்சனாவின் செயலுக்கு பலரும் எதிராக பேசியதால், சாச்சனா பிக்பாஸ் வீட்டின் ஹாலில் வைத்து கத்திக் கொண்டிருப்பார்.

இதைப் பார்த்த முத்துக் குமரன் சாச்சனாவிற்கு ஆதரவாக பேச வருவார். ஆனால், முத்துவை அங்கிருந்து கூட்டிச் சென்ற அருண், பெண்கள் அணியினர் வேண்டுமென்றே உன்னை தூண்டி விடுகின்றனர். நீ இந்த சந்தர்பத்தில் கண்டிப்பாக பேசுவாய் என தெரிந்தே தான் இப்படி செய்கின்றனர். எனவே, நீ அங்கே காலை வைத்தால் காலே இல்லாமல் போய்விடும் என அறிவுரை வழங்கி முத்துவை சமாதானம் செய்வார்.

சாச்சனாவை ரவுண்டு கட்டிய பெண்கள்

மறுபுறம் பெண்கள் அணியினர் சாச்சனாவை வசைபாடியதோடு மட்டும் நிறுத்தாமல், சாச்சனா டபுள் ஸ்டாண்டு எடுக்கிறார் என சௌந்தர்யா சொல்கிறார். மேலும், நீங்க ஒரு விஷயத்தை ஸ்டார்ங்கா முன்னாடி வைக்கும் போதே நீங்களே அதை சொதப்பி விடுறீங்க என தியா கூறுகிறார். இதனால், பிக்பாஸ் வீடே கலவர வீடாக மாறியுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.