அமரன் படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்..தூங்க முடியல! இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மாணவர் ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு
அமரன் படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூங்க முடியாமல், இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்திருப்பதாக கூறி கல்லூரி மாணவர் படக்குழுவினரிடம் ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். சாய் பல்லவி கொடுத்த போன் நம்பரால் தினமும் தொல்லையை அனுபவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி ரிலீஸாக சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேலாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் தற்போது வரை ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், எதிர்ப்புகள் எழுந்தபோதிலும் ரசிகர்களின் ஆதரவுடன் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது.
ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு
இதையடுத்து அமரன் படத்தின் பரபரப்புக்கு மத்தியில், அந்த படத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் படக்குழுவினரிடம் ரூ. 1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமரன் படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் ஹீரோயின் சாய் பல்லவி தனது போன் நம்பர் என சிவகார்த்திகேயனிடம் ஒரு நம்பரை கொடுப்பார். அந்த நம்பர் தெளிவாக தெரியும் விதமாக படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து சாய் பல்லவி குறிப்பிட்டிருக்கும் அந்த நம்பர் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் வாகீசன் என்பவருடையது என தெரியவந்துள்ளது.
தொடர் கால்களால் தொல்லை
இதைத்தொடர்ந்து சாய் பல்லவி கொடுத்த என் என்பதால் பலரும் அந்த நபருக்கு தொடர்பு கொண்டு பேசி முயற்சித்தும், மெசேஜ் அனுப்பியும் வந்துள்ளனர். இதனால் தொடர் கால்கள் மற்றும் மெசேஜ்கள் வந்த நிலையில், அமரன் படத்தில் தனது எண் கொடுக்கப்பட்டிருப்பது வாகீசனுக்கு தெரியவந்தது.
தொடர்ந்து போன் கால்கள், மெசேஜ்கள் வந்ததால் தொல்லை தாங்க முடியாமல் தனது போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார். அவசரமாக கால் செய்த போன் ஆன் செய்தாலும் தனக்காக கால் செய்ய முடியாத அளவில் நாளுக்கு நாள் போன் தொல்லை அதிகரிக்க மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
கண்டுகொள்ளாத அமரன் படக்குழு
இந்த விவகாரம் தொடர்பாக ஷோஷியல் மீடியாவில் அமரன் படக்குழுவை டேக் செய்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் மாணவர் வாகீசன். அதில் தனது நம்பர் தெரியும் காட்சியை பிளர் செய்யுமாறும் கூறியிருந்தார். ஆனால் அதற்கு படக்குழுவினர் தரப்பில் எந்த பதிலும் இல்லாத நிலையில் தற்போது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அமரன் படம் வெளியான நாளில் இருந்து தொடர்ந்து வரும் கால்கள், மெசேஜ்களால் தன்னால் படிக்கவோ, தூங்கவோ முடியவில்லை. தனது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டு போன்ற விஷயங்களில் இந்த நம்பரை தான் இணைத்துள்ளேன். எனவே என்னால் இந்த நம்பரை மாற்ற முடியாது.
எனவே தனக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலுக்கு அமரன் படக்குழு நஷ்ட ஈடு தரக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமரன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் அமரன் திரைப்படம் வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த வரதராஜன் வாழ்க்கையை அடிப்பைடையாக வைத்து உருவாகியுள்ளது. படம் வெளியான நாள் முதல் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. படம் வெளியாகி 20 நாள்களுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில் ரூ. 303 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக அமரன் உள்ளது. அத்துடன் கோலிவுட் ஹீரோக்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோருக்கு அடுத்தபடியாக ரூ. 300 கோடி வசூலை தொட்ட ஹீரோவாக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார்.