என்னை போன்றவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரக்கூடாதா? நீங்கள் ஆதரவு தர மாட்டீங்களா? எமோஷனலாக பேசி வீடியோ வெளியிட்ட ரியா!
எமோஷனலாக பேசி வீடியோ வெளியிட்ட ரியா அதில் எதற்காக மக்கள் என்னை ரிஜெக்ட் பண்ணினார்கள் என்று தான். ஒருவேளை நான் ஏற்கனவே பிரபலம் இல்லை அதனால் அவர்களுக்கு என்னைப் பற்றி யார் என்று தெரியாததால் எனக்கு சப்போர்ட் செய்யவில்லையா? என்னை போன்றவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரக்கூடாதா? என கேள்வி எழுப்பினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக்பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வந்தனர். இதனால், பிக்பாஸ் மீதான விருப்பம் மக்கள் மத்தியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.
சுவாரசியமே இல்லாத பிக்பாஸ் போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக பிக்பாஸ் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும். அந்த வகையில், 6வது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் தீபக், ஜாக்குலின், ஜெஃப்ரி, மஞ்சரி, ராணவ், ரஞ்சித், ரியா, சாச்சனா, சத்யா, சிவக்குமார், சொந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்தப் பட்டியலில் உள்ள ஒருவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றாமல் இருக்க போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் அணி, கலந்து ஆலோசித்து ஒருவரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றி வீட்டிலேயே இருக்க வைப்பர். அந்தவகையில், 6வது வாரத்தில் நாமினேஷன் பாஸ் வென்ற ஆண்கள் அணி தீபக்கை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றினர்.
5 போட்டியாளர்கள் எலிமினேட்
இதையடுத்து நாமினேஷன் பட்டியலில் உள்ள மற்ற போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் காப்பாற்றப்படுவர். குறைவான வாக்குகளை பெற்றவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர். அந்த வகையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த ரியா தியாகராஜன் வெறியேறினார்.
ரியா எமோஷனலாக பேசி வீடியோ
இந்த நிலையில் வெளியே வந்த ரியா எமோஷனலாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ”அதில் அவர் இந்த வீடியோ பதிவு பண்ணும் போது நான் ரொம்ப மென்டலா டவுன் ஆகி இருக்கிறேன். இந்த வாய்ப்பு கிடைக்கும்போது எனக்கு பலரும் சொன்ன விஷயம் நீ பிஆர் செட் பண்ணு. நீ இப்படி ஒர்க் பண்ணு, என நிறைய அட்வைஸ் கொடுத்தாங்க.
ஆனாலும் நான் எனக்கு பிஆர் ஒன்றும் தேவையில்லை. நான் உள்ளே போய் என்னால் என்ன பண்ண முடியுமோ அதை நிச்சயம் பண்ணுவேன். அதை பார்த்து மக்களுக்கு என்ன தோன்றுகிறதோ அவங்க சின்னதா சப்போர்ட் பண்ணி இருந்தாலும் எனக்கு போதும் என்று தான் நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றேன்.
என்னை போன்றவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரக்கூடாதா?
எங்கு தவறு நடந்தாலும் அங்கு என் குரல் எழுப்பினேன். என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷயங்களும் கேட்க வேண்டிய இடத்தில் நியாயமானதாக நடந்து கொண்டேன். ஆனாலும் எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.
எதற்காக மக்கள் என்னை ரிஜெக்ட் பண்ணினார்கள் என்று தான். ஒருவேளை நான் ஏற்கனவே பிரபலம் இல்லை அதனால் அவர்களுக்கு என்னைப் பற்றி யார் என்று தெரியாததால் எனக்கு சப்போர்ட் செய்யவில்லையா? என்னை போன்றவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரக்கூடாதா? நாங்கள் விளையாட நினைக்ககூடாதா? மீறி அப்படி ஏதாவது நடந்தால் நீங்கள் ஆதரவு தர மாட்டீங்களா? இருந்தாலும் இத்தனை நாள் ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி.எனக்கு வேதனையாக இருக்கிறது என அந்த வீடியோவில் ரியா எமோஷனலாக பேசியிருக்கிறார்.
டாபிக்ஸ்