தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Re Polling: ‘அடித்து நொறுக்கப்பட்ட சாம்ராஜ் நகர் வாக்குச்சாவடி! மறுதேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்!

Re Polling: ‘அடித்து நொறுக்கப்பட்ட சாம்ராஜ் நகர் வாக்குச்சாவடி! மறுதேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்!

Kathiravan V HT Tamil
Apr 27, 2024 05:19 PM IST

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடயில் ஏப்ரல் 29-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இந்திகநாதா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து உள்ளது.
சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இந்திகநாதா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து உள்ளது. (HT_PRINT)

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஹனூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஏப்ரல் 29-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், சாம்ராஜ்நகர் தொகுதிக்கான தேர்தல் அதிகாரி மற்றும் பொது பார்வையாளர் சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையிலும், அனைத்து பொருள் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு, நேற்று (ஏபரல் 26) ஹனூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள வாக்குச் சாவடி எண் 146 இல் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என்று அறிவித்து உள்ளது. 

ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி மீண்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் இந்திகநாதா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து உள்ளது. 

மாவட்ட நிர்வாகத்தின் கூற்றுப்படி, கிராம மக்கள் போதுமான உள்கட்டமைப்பு மேம்பாடு இல்லாததால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். இருப்பினும், உள்ளூர் அதிகாரிகளின் உறுதிமொழிகள் மற்றும் முயற்சிகளுக்குப் பிறகு, வாக்குப்பதிவு நடந்து வந்தது.

முதற்கட்ட தகவல்களின்படி, ஒரு குழுவினர் வாக்களிக்க விரும்பிய நிலையில், அதற்கு எதிராக மற்றொன்று குழுவினர் தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணிக்க ஆர்வமாக இருந்தனர். இது அவர்களுக்கு இடையே மோதலுக்கு வழிவகுத்தது, இந்த மோதலின் போது அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தியது உடன் கல்வீசி தாக்குதலிலும் ஈடுபட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். 

WhatsApp channel