தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Massage Benefits: ஆசனவாயில் ஆயில்மசாஜ் செய்வதால் கிடைக்கும் அற்புதங்கள்.. நீங்கும் எரிச்சல், மனப்பதற்றம்!

Massage Benefits: ஆசனவாயில் ஆயில்மசாஜ் செய்வதால் கிடைக்கும் அற்புதங்கள்.. நீங்கும் எரிச்சல், மனப்பதற்றம்!

Marimuthu M HT Tamil
Apr 27, 2024 04:19 PM IST

Massage Benefits: ஆசனவாயில் ஆயில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் முதல் பல்வேறு மசாஜ் வகைகள் குறித்துக் காண்போம்.

ஆசனவாயில் ஆயில்மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.. நீங்கும் எரிச்சல், மனப்பதற்றம்!
ஆசனவாயில் ஆயில்மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.. நீங்கும் எரிச்சல், மனப்பதற்றம்!

ட்ரெண்டிங் செய்திகள்

நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிவது நமது உடலில் வெப்பத்தை அதிகரித்து நம்மை நோய்க்குள் தள்ளி விடும்.

இதனைத் தடுக்க, குணப்படுத்த மனித தொடுதல் நம் உடலுக்கு நல்லவிதமான பலன்களைத் தருகின்றன. ஒருவரின் மன பதற்றத்தைக் குறைப்பதற்கும், தூக்கத்தை மேம்படுத்துவதற்கும், உடலையும் மனதையும் லேசாக உணரவைக்கவும், பல்வேறு உடல்சார்ந்த பிரச்னைகளைத் தீர்க்கவும் மசாஜ் நுட்பங்கள் பயன்படுகின்றன.

பொதுவாக மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்: உடலில் தசை வலி மற்றும் தசைப் பிடிப்பினை நீக்குகிறது. உடலில் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்க வரம்பை அதிகரிக்கிறது. உடலின் வடிவத்தை மேம்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.

நமது உடலின் ஆற்றலை சீராகப் பணி செய்ய உதவுகிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் மற்றும் பருக்களில் உண்டாகும் நீரை வெளியேற்றவும் உதவுகிறது. தலைவலி, மூட்டு வீக்கம் மற்றும் அதனால் உண்டாகும் வலி ஆகியவற்றைச் சமாளிக்க உதவுகிறது.

தலை மசாஜ் - இந்தியாவில் தலை மசாஜ் செய்வது என்பது 1,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஒரு பாரம்பரிய வடிவமாகும். இது மேல் உடலில், குறிப்பாக தலை, கழுத்து மற்றும் தோள்களில் கவனம் செலுத்துகிறது. உடலில் பதற்றத்தைத் தணிக்கவும், தளர்வை ஊக்குவிக்கவும் சிகிச்சையாளர் மசாஜ் நுட்பங்களை தலையில் பயன்படுத்துகிறார். அதாவது பிசைதல், தேய்த்தல் மற்றும் தட்டுதல் இவற்றில் முக்கியமானவை. தலையில் தேங்காய் எண்ணெயோ அல்லது நல்லெண்ணெயோ வைத்து மசாஜ் செய்வதன் மூலம் தலைவலி குறையும். உச்சந்தலையில் மசாஜ் செய்வது முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடியது. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தக் கூடியது. 

முக மசாஜ்: முக மசாஜ் என்பது முகத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட அழுத்தப் புள்ளிகளில் கவனம் செலுத்துகிறது.

இதில் மசாஜ் செய்பவர், முகத்தினை சுற்றியும், நிணநீர் எனப்படும் பருக்களில் தேங்கும் நீரை வெளியேற்றும் விதமான மசாஜ் மற்றும் தட்டுதலைப் பயன்படுத்துகின்றார். இதன்மூலம், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கோடுகள் ஆகியவை குறையும். முகத்தில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது, தோல் சாஃப்ட்டாக மாறும்.

அக்குபிரஷர் மசாஜ்: அக்குபிரஷர் மசாஜ் என்பது முகம் மற்றும் தலையில் குறிப்பிட்ட வர்மப் புள்ளிகளுக்கு அழுத்தத்தைப் பயன்படுத்தும் பாரம்பரிய நுட்பமாகும். இது பாரம்பரிய சீன மருத்துவத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. உடலின் ஆற்றல் ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதை அக்குபிரஷர் மசாஜ் நோக்கமாகக் கொண்டுள்ளது. அக்குபிரஷர் மசாஜ் பதற்றத்தைப் போக்கவும், தலைவலியைக் குறைக்கவும், தளர்வை ஊக்குவிக்கவும் உதவும்.

ஆசனவாய் மசாஜ்: சிலர் ஆசனவாயில் எரிச்சல், வலி ஆகியவற்றால் அவதிப்படலாம். இதனால் ஆசனவாயில் சிறிய சேதம் ஏற்படும். இதனைத் தவிர்க்க ஆசன வாயில் தேங்காய் எண்ணெயைத் தேய்த்து மசாஜ் செய்யவும். இது ஆசனவாய் பிளவுகளை சரிசெய்யும். இவ்வாறு ஆசன வாயில் பிரச்னைகள் எரிச்சல் குறையும். 

மசாஜ் செய்ய சரியான நேரம்: அதிகாலை நேரத்தில் ஆயில் மசாஜ் செய்துகொண்டால் அந்நாள் முழுக்க புத்துணர்ச்சியாக இருக்கும். மதிய நேரத்தில் மசாஜ் செய்வதால் சாப்பிட்டு, ஒரு மணிநேரத்துக்குப் பின், ஆயில் மசாஜ் செய்துகொள்ளலாம்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்