தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ரூமுக்குள் சென்ற ரியா.. தீபாவுடன் ரொமன்ஸ் செய்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ரூமுக்குள் சென்ற ரியா.. தீபாவுடன் ரொமன்ஸ் செய்த கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 27, 2024 02:23 PM IST

மீனாட்சி அப்பா அம்மாவை அபிராமியுடன் பிரச்சினை செய்ய வைக்கலாம் என்று திட்டம் போட்டு, அவர்களுக்கு போன் செய்து, ஆனந்திற்கு இரண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு என்று போட்டுக் கொடுக்கிறாள்.

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

நேற்றைய எபிசோடில், கார்த்தியை வேலையில் இருந்து தூங்க ஆனந்த் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

அதாவது ரியா, மீனாட்சி அப்பா அம்மாவை அபிராமியுடன் பிரச்சினை செய்ய வைக்கலாம் என்று திட்டம் போட்டு, அவர்களுக்கு போன் செய்து, ஆனந்திற்கு இரண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு என்று போட்டுக் கொடுக்கிறாள்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்த மீனாட்சியின் அப்பா, அம்மா எங்களை இப்படி பண்ணலாமா..? உங்கள நம்பி தானே எங்க பொண்ண அனுப்பினோம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, தீபாவும், மைதிலியும் இதெல்லாம் ஐஸ்வர்யா மற்றும் ரியாவின் வேலையாகத்தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்கின்றனர்.

இதனையடுத்து ரியாவை இழுத்து சென்று, வெளியே வராதபடி ஒரு ரூமுக்குள் பூட்டி வைக்கின்றனர். பிறகு மீனாட்சி, தன்னுடைய அம்மாவிடம், என்ன சொல்லாமல் வந்து இருக்கீங்க என்று கேட்கிறாள். 

மேலும், எந்த பிரச்சினையும் இல்ல; நான் நல்லா தான் இருக்கேன் என்று சமாளிக்கிறாள். அபிராமியும் ஒரு பிரச்சினையும் இல்லை, ஏதாவது பிரச்சினைனா நானே சொல்லி இருப்பேனே என்று கூறினாள். 

இதையடுத்து மீனாட்சி, நீங்க நம்பலனா ஆனந்த் கிட்ட கூட பேசி பாருங்க என்று போன் போட்டு… என்னங்க அப்பா வந்து இருக்காங்க.

நமக்குள்ள எதுவும் பிரச்சினை இல்லைன்னு சொல்லுங்க என்று போனை கொடுக்க, ஆனந்தும் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்கிறான். அதை கேட்டவுடன், மீனாட்சியின் அப்பா, அம்மா நிம்மதி அடைகின்றனர். 

அதன் பிறகு, அவர்கள் கிளம்பிச் செல்ல, மீண்டும் மீனாட்சி ஆனந்துக்கு போன் போட்டு, இந்த குடும்பத்தோட மானம் போகக்கூடாது என்று தான் உங்களுக்கு போன் பண்ணி பேச சொன்னேன். இத நீங்க அட்வான்டேஜா எடுத்துக்காதீங்க என்று சொல்லி, திட்டி போனை வைக்கிறாள் 

அதன் பிறகு, தீபா ரியாவை திறந்து விட, ஐஸ்வர்யா இந்த நேரம் பார்த்து எங்க போன என்று கோபப்பட்டு, நடந்ததை சொல்கிறாள். 

இந்தப்பக்கம், வீட்டுக்கு வந்த கார்த்திக், டயர்டாக இருந்த நிலையில், தீபா மசாஜ் செய்து விடவா என்று கேட்டாள். அவன் வேண்டாம் என்றும் சொல்ல, தீபா வருத்தப்பட்டாள். இந்த நிலையில் கார்த்திக் தீபாவின் கையைப் பிடித்து இழுத்து, ரொமான்ஸ் செய்தான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்