தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்திய யானை கூட்டம்- வீடியோ வைரல் !

Coimbatore: தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்திய யானை கூட்டம்- வீடியோ வைரல் !

Apr 27, 2024 10:31 AM IST Pandeeswari Gurusamy
Apr 27, 2024 10:31 AM IST

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100° F யை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்திருப்பதால் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுகின்றன. இந்நிலையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு எனும் மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள் பறவைகள் நீர் அருந்துவதற்கு தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்து தண்ணீர் நிரப்பி வைக்கின்றனர். அப்பகுதிக்கு குட்டிகள் உடன் வந்த 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் தொட்டியில் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் அருந்தின. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

More