தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mamata Banerjee: ’ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த மம்தா பானர்ஜி!’ தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது அசம்பாவிதம்!

Mamata Banerjee: ’ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த மம்தா பானர்ஜி!’ தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது அசம்பாவிதம்!

Kathiravan V HT Tamil
Apr 27, 2024 05:02 PM IST

”மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் ஏறும்போது தவறி விழுந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது”

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் வீடியோவில் உள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறும் வீடியோவில் உள்ளது. (HT photo)

ட்ரெண்டிங் செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துர்காபூரில் உள்ள பஸ்சிம் பர்தமானில் ஹெலிகாப்டரில் ஏறும்போது வழுக்கி கீழே விழுந்தார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்த சம்பவத்தின் வீடியோவை செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ பகிர்ந்துள்ளது.

மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் ஏறுவதை வீடியோ காட்டுகிறது. அவர் முன்னால் சென்று உட்கார நகர்ந்தபோது கீழே விழுந்தார். அவருக்கு உதவ பாதுகாவலர்கள் விரைந்தனர். இருப்பினும், அவர் அசன்சோலுக்கு தனது பயணத்தைத் மேற்கொண்டு உள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், மக்களவைத் தேர்தல் மாநிலத்தில் ஏழு கட்டங்களாக நடைபெறுவது குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை மம்தா பானர்ஜி தாக்கினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், பானர்ஜி பலத்த காயமடைந்த பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் போது அவரது நெற்றியில் ஆழமான காயம் மற்றும் மூக்கில் வெட்டு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டன.

மம்தா பானர்ஜியின் காயம் பற்றிய செய்தியை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நிலையில். இந்த புகைப்படத்தில் மம்தா பானர்ஜி நெற்றியில் இரத்தம் வழியும் அவரது படம் வெளியாகி உள்ளது.

“எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி பெரிய காயம் அடைந்தார். தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள்” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டு இருந்தது. 

2023 டிசம்பரில், ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது அவருக்கு ஏற்பட்ட இடது முழங்கால் மற்றும் வலது தோள்பட்டை காயங்களுக்கு சிகிச்சையளிக்க கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றார் என்று செய்தி நிறுவனமான பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கினார். மற்றொரு வாகனத்துடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக அவரது கார் திடீரென நிறுத்தப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ.க்கு தெரிவித்தார்.

ஓட்டுநருக்கு அருகில் முன்னால் அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் தலை கண்ணாடியில் மோதியதில் காயமடைந்தார் என்று அவர் கூறினார். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, முதல்வர் மீண்டும் கொல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பெற்றார். 

IPL_Entry_Point