தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Dc Vs Mi Innings Break: "எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா"- மும்பை பவுலர்ஸை கதற விட்ட டெல்லி பேட்டர்கள்

DC vs MI Innings Break: "எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா"- மும்பை பவுலர்ஸை கதற விட்ட டெல்லி பேட்டர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 27, 2024 05:29 PM IST

பவுலர்களை படாதபாடு படுத்திய மற்றொரு போட்டியாக டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதிய இந்த போட்டி அமைந்துள்ளது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடங்கிய டெல்லி கேபிடல்ஸ் 250+ ரன்கள் அடித்த லிஸ்டில் இணைந்துள்ளது.

பந்தை சிக்ஸரக்கு பறக்கவிடும் டெல்லி கேபிடல்ஸ் ஓபனர் ஜேக் பிராசர்-மெக்குர்க்
பந்தை சிக்ஸரக்கு பறக்கவிடும் டெல்லி கேபிடல்ஸ் ஓபனர் ஜேக் பிராசர்-மெக்குர்க் (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் மோதல் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே டெல்லி அணியை பொறுத்தவரை பதிலடி கொடுக்கும் போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் பிருத்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜேவுக்கு பதிலாக குமார் குஷ்க்ரா, லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலாக லூக் உட் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் அடித்துள்ளது

அதிகபட்சமாக ஜேக் ப்ராசர் மெக்குர்க் 84. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 48, ஷாய் ஹோப் 41, அபிஷேக் போரல் 36 ரன்கள் அடித்தனர்.

மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் லூக் உட், பியூஷ் சாவ்லா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ஜேக் ப்ராசர் மெக்குர்க் மிரட்டல் அடி

ஆட்டத்தின் முதல் இரண்டு பந்தில் பவுண்டரி, மூன்றாவது பந்தில் சிக்ஸர், 5வது பந்தில் பவுண்டரி என முதல் ஓவரில் 19 ரன்கள் அடித்து அதிரடியான ஆட்டத்தை தொடங்கினார் ஓபனரான மெக்குர்க். மும்பை பவுலர்கள் எப்படி பந்து வீசினாலும் அடித்து துவம்சம் செய்து வந்த அவர், 15 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

27 பந்துகளில் 84 ரன்கள் அடித்த அவர், சாவ்லா பந்தில் அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 11 பவுண்டரி, 65 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 114 ரன்களை ஓபனர்கள் மெக்குர்க் - அபிஷேக் போரல் சேர்த்தனர். மெக்குர்க் அவுட்டான பின்னர் டெல்லி அணி ரன் ரேட் சற்றே குறைந்தாலும் அதிரடியை விடாமல் அந்த அணி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்தனர்.

மற்றொரு ஓபனரான அபிஷேக் போரல் 36, மூன்றாவது பேட்ஸ்மேனாக வந்த ஷாய் ஹோப் 17 பந்துகளில் 41 ரன்கள் அடித்தனர். ரிஷப் பண்ட் 29 ரன்கள் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஸ்டப்ஸ் 48 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

மும்பை பவுலர்களில் பும்ரா மட்டும் ஓரளவு கட்டுக்கோப்பாக வீசினார். 4 ஓவரில் 35 ரன்கள் என அவர் மட்டும்தான் குறைவாக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point