தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Sunrisers Hyderabad: வெறும் 8 போட்டிகள் தான்..! வரலாற்று சாதனை நிகழ்த்திய சன் ரைசர்ஸ்

Sunrisers Hyderabad: வெறும் 8 போட்டிகள் தான்..! வரலாற்று சாதனை நிகழ்த்திய சன் ரைசர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 26, 2024 04:57 PM IST

இந்த சீசன் சன் ரைசர்ஸ் அணிக்கு இதுவரை சிறப்பானதாக அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்துடன் இன்னும் 6 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி என்ற தனித்துவ சாதனையும் புரிந்துள்ளது.

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் சன் ரைடர்ஸ் பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட்
பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் சன் ரைடர்ஸ் பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

நான்கு தொடர் வெற்றிக்கு பின்னர் ஆர்சிபி அணிக்கு எதிராக உள்ளூர் மைதானமான ஹைதாராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இதற்கிடையே இன்னும் 6 போட்டிகள் மீதமிருக்க சன் ரைசர்ஸ் அணி தனித்துவ சாதனையைபுரிந்துள்ளது.

அதிக சிக்ஸர்கள் அடித்த அணி

ஒரே சீசனில் 100 சிக்ஸர்கள் அடித்த அணி என்ற தனித்துவ சாதனையை நிகழ்த்தியுள்ளது சன் ரைசர்ஸ். ஐபிஎல் வரலாற்றிலேயே இது முதல் முறையாக நடந்துள்ளது. வெறும் 8 போட்டிகள் மட்டுமே விளையாடி இந்த சாதனையை செய்துள்ளது. இன்னும் 6 போட்டிகள் மீதம் இருந்து வரும் நிலையில் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் இதே பார்மை தொடர்ந்தால் 200க்கு மேற்பட்ட சிக்ஸர்களும் அடிக்க வாய்ப்பு உள்ளது.

இதற்கு முன்னர் ஐபிஎல் 2022 சீசனில் 97 சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்திருந்தது சன் ரைசர்ஸ். தற்போது அதை 100 ஆக்கியுள்ளது.

அதிரடி பேட்டிங் லைன் அப்

சன் ரைசர்ஸ் ஓபனர்களான ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோர் உச்சகட்ட பார்மில் இருந்து வருகிறார்கள். எதிரணி பவுலர்கள் யாராக இருந்தாலும் அடித்து துவம்சம் செய்து வான வேடிக்கை காட்டி வருகின்றனர். இவர்களுடன் ஹென்ரிச் கிளாசனும் இணைந்து சிக்ஸர் வேட்டை நிகழ்த்தி வருகிறார். அத்துடன் நிதிஷ் குமார் ரெட்டி, ஐடன் மார்க்ரம், அப்துல் ஷமாத், ஷபாஸ் அகமத் போன்றோரும் தங்களது பங்குக்கு அதிரடியை காட்டி மிரட்டி வருகிறார்கள்.

மூன்று முறை 250+ ஸ்கோர்

இந்த சீசனில் நான்கு முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது சன் ரைசர்ஸ். இதில் மூன்று முறை 250+ ரன்களுக்கு மேல் அடித்து மற்றொரு சாதனை நிகழ்த்தியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை அடித்து சாதனை புரிந்த சன் ரைசர்ஸ், தங்களது சாதனையையே முறியடித்து மீண்டும் சாதித்தது. முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமை பெற்றது.

இதன் பின்னர், ஒரு வார இடைவெளியில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 287 ரன்கள் அடித்து தங்களது சாதனையையே முறியடித்தது. ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியுற்ற போதிலும் தற்போது நிலையில் அணி நல்ல பார்மில் தான் இருந்து வருகிறது.

சன் ரைசர்ஸ் அடுத்த போட்டி

சன் ரைசர்ஸ் தனது அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வரும் ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த முதல் மோதலில் சன் ரைசர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point