DC vs MI Preview: மும்பைக்கு எதிரான பதிலடி தரும் போட்டி! சிஎஸ்கேவை முந்த தயாராக இருக்கும் டெல்லி கேபிடல்ஸ்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் மோதலில் தோல்வி அடைந்திருப்பதால் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் பதிலடி கொடுக்க டெல்லி காத்திருக்கிறது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் என்பதால் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.

ஐபிஎல் 2024 தொடரின் 43வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் 9 போட்டிகளில் 4 வெற்றியுடன் 6வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 8 போட்டிகளில் 3 வெற்றியுடன் 9வது இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் மோதல் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே டெல்லி அணியை பொறுத்தவரை பதிலடி கொடுக்கும் போட்டியாக இந்த ஆட்டம் அமையவுள்ளது. இரண்டு போட்டிகள் இன்று நடைபெற இருக்கும் நிலையில் முதல் போட்டியாக டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மோதல் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
பாக்க காம்பினேஷனுடன் இருக்கும் டெல்லி
கைவிரல் காயம் காரணமாக டேவிட் வார்னர் விளையாடமாட்டார் எனவும், காயத்தால் இஷாந்த் ஷர்மாவும் களமிறங்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஐபிஎல் தொடரை விட்டு விலகியிருக்கும் மிட்செல் மார்ஷ்க்கு பதில் ஆப்கானிஸ்தான் குல்ப்தீன் நயிப் சேர்க்கப்பட்டுள்ளார்.