Virat Kohli's IPL Records: ஐபிஎல் வரலாற்றில் தனி ஒருவனாக தரமான சாதனை படைத்த விராட் கோலி!
IPL 2024, Virat Kohli: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
(1 / 6)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நல்ல ஸ்கோரை எட்டியது. ஐதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
(AP)(2 / 6)
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நேற்றை ஆட்டத்தில் அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இதுவரை நடைபெற்ற 17 ஐ.பி.எல் சீசன்களில் 10 சீசன்களில் 400-க்கும் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
(PTI)(3 / 6)
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ரன்களை குவித்திருக்கிறார்.
(AP)(4 / 6)
2015 ஆம் ஆண்டு 505 ரன்களும், 2016ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 973 ரன்களை குவித்து அசத்தி உள்ளார்.
(AP)(5 / 6)
2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 14 போட்டிகள் விளையாடிய விராட் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ரன்கள் எடுத்துள்ளார். 2019-ல் 464 ரன்களும், 2020-ல் 466 ரன்களும் எடுத்திருக்கிறார் விராட் கோலி. 2021-ல் 405 ரன்களும், 2023-ல் 639 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார்.
(PTI)மற்ற கேலரிக்கள்