தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Lsg Vs Rr Preview: ப்ளேஆஃப் வாய்ப்பை முதல் அணியாக பெறும் முயற்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ்! பழிதீர்க்க காத்திருக்கும் லக்னோ

LSG vs RR Preview: ப்ளேஆஃப் வாய்ப்பை முதல் அணியாக பெறும் முயற்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ்! பழிதீர்க்க காத்திருக்கும் லக்னோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 27, 2024 07:00 AM IST

லக்னோவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் முதல் அணியை ப்ளேஆஃப் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் உறுதி செய்யும். இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் மோதலில் பெற்ற தோல்விக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பழிதீர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இரு அணிகளுக்கு இடையே இந்த சீசனில் நடைபெற்ற முதல் மோதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இதையடுத்து லக்னோ அணி தற்போது உள்ளூரில் ராஜஸ்தான் அணியை பழிதீர்க்கும் போட்டியாக இது உள்ளது. இந்த போட்டி இன்றைய நாளின் இரண்டாவது போட்டியாக மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மயங்க் யாதவ் களமிறங்க வாய்ப்பு

கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரான், ஆயுஷ் பதோனி உள்ளார்கள். குவண்டைன் டி காக் தனது பார்மை மீட்டெடுத்திருக்கும் நிலையில், ஸ்டோய்னிஸும் சதமடித்துள்ளார். எனவே பேட்டிங்கில் அசைக்க முடியாத லைன் அப்பை கொண்டுள்ளது. ஸ்டார் பவுலர்கள் இல்லாத போதிலும் இளம் பந்து வீச்சாளர்களை வைத்து எதிரணிக்கு நெருக்கடி அளித்து வருகிறது லக்னோ அணி.

அந்த அணியின் அதிவேக பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் வயிறு தொடர்பான பிரச்னையால் கடந்த நான்கு போட்டிகள் விளையாடவில்லை. அவர் தேறி வருவதால் இந்த போட்டியில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் போட்டி லக்னோவில் நடப்பதால் கூடுதல் ஸ்பின்னராக எம் சித்தார்த் சேர்க்கப்படலாம்

முதல் அணியாக ப்ளேஆஃப் தகுதிக்கு முயற்சி

ராஜஸ்தான் ராயல்ஸ் தற்போது 14 புள்ளிகளை பெற்றிருக்கும் நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக ப்ளேஆஃப் வாய்ப்பு உறுதியாக்கி கொள்ளலாம். பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், பட்லர், சாம்சன், பிராக் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கிறார்கள். அதிரடிக்கு ஹெட்மேயர் இருக்கிறார்.

காயத்திலிருந்து மீண்டு வந்து பவுலிங் செய்து வந்திருக்கும் சந்தீப் ஷர்மா, முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈரத்தார். எனவே வேகத்துக்கும் அவரும், ட்ரெண்ட் போல்டும், ஸ்பின்னுக்கு சஹால், அஸ்வின் ஆகியோர் இருக்கிறார்கள். எனவே முதல் அணியாக ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க ராஜஸ்தான் ராயல்ஸ் முயற்சிக்கும்.

பிட்ச் நிலவரம்

லக்னோவில் கருப்பு மணல், செம்மண் என இரு பிட்ச்கள் இருக்கின்றன. இவை இரண்டுமே பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் சவால் அளிக்கூடியதாகவே இருந்துள்ளன. இருப்பினும் இந்த சீசனில் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் இங்கு ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இன்றைய போட்டியில் விளையாடப்போவது எந்த ஆடுகளமாக இருந்தாலும் ஸ்பின்னுக்கு கைகொடுக்கும் எனவும், பனிபொலிவு தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை மோதிக்கொண்ட 4 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக லக்னோவின் அதிகபட்ச ஸ்கோராக 173 ரன்கள் உள்ளது. லக்னோ அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகபட்ச ஸ்கோர் 193 ரன்கள் என உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point