தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ghilli Box Office: புது படங்களுக்கே டஃப் கொடுக்கும் கில்லி.. ஒரே வார ரிலீஸில் கோடிகளை அள்ளி மிகப்பெரிய சாதனை

Ghilli Box Office: புது படங்களுக்கே டஃப் கொடுக்கும் கில்லி.. ஒரே வார ரிலீஸில் கோடிகளை அள்ளி மிகப்பெரிய சாதனை

Aarthi Balaji HT Tamil
Apr 27, 2024 10:25 AM IST

Ghilli: கில்லி படம் வெளியாகி 20 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்த திரைப்படம் ஏப்ரல் 20, 2024 அன்று 4K வடிவத்தில் மீண்டும் வெளியிடப்பட்டது, இது திரைப்பட ஆர்வலர்களிடையே உற்சாகத்தைத் தூண்டியது.

கில்லி
கில்லி

ட்ரெண்டிங் செய்திகள்

கில்லி படத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, மயில்சாமி, ஜானகி சபேஷ், நான்சி ஜெனிபர், நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம் மற்றும் பாண்டு ஆகியோர் நடித்து உள்ளனர். படத்திற்கான இசையை வித்யாசாகர் இசையமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், பரதன் வசனம் எழுதினார்.

தெலுங்கு ரீமேக்

2003 ஆம் ஆண்டு தெலுங்குப் படமான "ஒக்கடு" படத்தின் ரீமேக்கான " கில்லி ", அதன் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களை வென்றது. 

ஒரு போட்டிக்காக மதுரைக்குச் செல்லும் நம்பிக்கைக்குரிய கபடி வீரரான சரவண வேலு பின் தொடர்கிறது கில்லி திரைப்படம். முத்துப்பாண்டியிடமிருந்து, தனலட்சுமியை மீட்பதற்காக இந்த பயணம் தொடரும். அவளது விருப்பத்திற்கு மாறாக அவரை எப்படியாவது வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முத்துப்பாண்டியிடமிருந்து காப்பாற்றுகிறார் கில்லி. அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதே கதையாகும்.

தலைசிறந்த படம்

கில்லி, படம் ஏப்ரல் 17 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு வெளியான போது, ​​அது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் 200 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இது ஒரு பிளாக் பஸ்டர் மற்றும் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக மாறியது. " கில்லி " திரைப்படம் விஜய்யின் கேரியரில் தலைசிறந்த படமாக கருதப்படுகிறது.

கில்லி படம் வெளியாகி 20 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்த திரைப்படம் ஏப்ரல் 20, 2024 அன்று 4K வடிவத்தில் மீண்டும் வெளியிடப்பட்டது, இது திரைப்பட ஆர்வலர்களிடையே உற்சாகத்தைத் தூண்டியது.

கோடிகளில் வசூல் செய்து சாதனை

ரசிகர்கள் பலரும் கில்லி படத்தை ஆர்வத்துடன் சென்று முதல் முறை போல் பார்த்து ரசித்து வருகிறார்கள். சொல்ல போனால் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என முதல் முறை போல் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கில்லி படம் வசூலில் சக்கப் போடு போட்டு வருகிறது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் 10 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளது. இன்னும் வரும் வாரங்களில் கில்லி படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பழைய படங்கள் போதுமே

என்ன தான் வார இறுதியில் புது தமிழ் படங்கள் வெளியானாலும் கில்லி படம் தான் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி வருகிறது. பலரும் புது படங்கள் ரிலீஸ் செய்வதற்கு பதிலாக இனிமேல் பழைய ஹிட் மூவிஸை வெளியீட்டால் தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்