தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Yuzvendra Chahal: ஐபிஎல் கிரிக்கெட்டில் மைல்கல் சாதனை புரிந்த முதல் பவுலரானார் யஸ்வேந்திர சஹால்

Yuzvendra chahal: ஐபிஎல் கிரிக்கெட்டில் மைல்கல் சாதனை புரிந்த முதல் பவுலரானார் யஸ்வேந்திர சஹால்

Apr 26, 2024 06:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 26, 2024 06:45 PM IST
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர் என்ற மைல்கல் சாதனையை புரிந்துள்ளார் ஸ்பின் பவுலரான யஸ்வேந்திரா சஹால். ஐபிஎல் போட்டிகளில் தற்போது அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 5 சீசன்களில் இவர் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சஹாலின் 70 சதவீதம் வரையிலான விக்கெட்டுகளை ஆர்சிபி அணியில் விளையாடியபோது எடுக்கப்பட்டது. ஐபிஎல் 2013 சீசனில் முதல் முறையாக முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார் சஹால். இவரது முதல் விக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேனான இருந்த முரளி விஜய். இவரது 100வது விக்கெட் யுசுப் பதான். ஆர்சிபி அணியின் முக்கிய பவுலராக இருந்து வந்தார் சஹால். அந்த அணிக்காக அவர் விளையாடியபோது அவரது பவுலிங் சராசரி 22.03, ஸ்டிரைக் ரேட் 17.4 என உள்ளது.ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுக்கள் எடுத்த பவுலர்கள் சுனில் நரேன் 172 விக்கெட்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக எடுத்துள்ளார்.இந்த லிஸ்டில் சஹால் ஆர்சிபி அணிக்காக 139 விக்கெட்டுகளை வீழ்த்தி 6வது இடத்தில் உள்ளார். மிடில் ஓவர்களில் 152 விக்கெட்டுகளை வீழ்த்தி டாப் பவுலராக இருந்து வருகிறார். 7 முறை 4 விக்கெட்டுகளை மேல் எடுத்து சுனில் நரேனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். 2022 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சஹால் 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த சீசனில் கொல்கத்தாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரே ஸ்டேடியத்தில் 52 விக்கெட்டுகள் எடுத்த நான்கவது இடத்தில் உள்ளார்.
More