தமிழ் செய்திகள்  /  Astrology  /  Karthigai Thirunal Is The Best Day To Fast And Worship Lord Muruga

Karthigai Viratham: ‘யாமிருக்க பயமேன்’-பங்குனி கிருத்திகை விரதம்!

Mar 25, 2023, 02:33 PM IST

கார்த்திகை திருநாள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடச் சிறந்த நாளாகும்.
கார்த்திகை திருநாள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடச் சிறந்த நாளாகும்.

கார்த்திகை திருநாள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடச் சிறந்த நாளாகும்.

.

சமீபத்திய புகைப்படம்

Today Horoscope : 'எல்லாம் நடக்கும்.. வேண்டியது வந்து சேரும்' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Apr 28, 2024 04:30 AM

Poorattathi Nakshatram: ’லட்சுமி கடாட்சத்தால் பணத்தை குவிப்பார்கள்!’ பூரட்டாதி நட்சத்திரத்தின் பலன்கள் இதோ!

Apr 27, 2024 05:54 PM

குருவின் குபேர அதிர்ஷ்டம்.. இந்த ராசிகளுக்கு பணமழை உறுதியானது.. வக்ர பெயர்ச்சி பயணம்.. செல்வத்தில் குளிக்க போகும் ராசி!

Apr 27, 2024 05:41 PM

சனி வெறி கொண்டு வருகிறார்.. அதிர்ஷ்ட மழை உங்களுக்குத்தான்.. ராஜ வாழ்க்கையால் பண மழை ஜாக்பாட் பெறும் ராசிகள்

Apr 27, 2024 05:19 PM

சாட்டையை எடுத்த சுக்கிரன்.. விரட்டி விரட்டி அடி வாங்க போகும் ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?.. பாக்கலாம் வாங்க!

Apr 27, 2024 02:00 PM

உருவானது கஜலட்சுமி யோகம்.. பண மழையில் மிதக்க போகும் ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா.. பாக்கலாம் வாங்க!

Apr 27, 2024 12:48 PM

தகப்பனுக்குப் பாடம் சொன்ன தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குக் கிருத்திகை திருநாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து எதிர்ப்புகளும் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.

கிழமைகளைக் கொண்டு இறைவனை வழிபடலாம், நட்சத்திர நாளை சிறப்பிக்கும் விதமாக அதற்கேற்ற தெய்வங்களை வழிபட்டு நன்மைகளைப் பெறலாம். சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரமாகத் திருவாதிரை நட்சத்திரம் விளங்குகிறது.

மாதம் தோறும் வரும் திருவாதிரை விரதத்தில் சிவபெருமானுக்கு வழிபாடு செய்து பூஜை செய்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். சுவாதி நட்சத்திர திருநாளில் ஸ்ரீ நரசிம்மரையும், உத்திர நட்சத்திர நாளில் ஸ்ரீ சுவாமி ஐயப்பனின் தரிசனம் செய்து வேண்டிக் கொள்ளலாம்.

திருவோண நட்சத்திரமானது பெருமாளுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. இந்நாளில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருப்பவர்கள் பலர் உண்டு. கார்த்திக் நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உரிய நாளாகக் கூறப்படுகிறது.

கார்த்திகை பெண்கள் முருகப்பெருமானை வளர்த்த காரணத்தினால் அவருக்குக் கார்த்திகேயன் என்று பெயர் அமைந்தது. தை மாத பூச நட்சத்திரமும், பங்குனி உத்திர திருநாளும் முருகனுக்கு உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரமானது முருகப்பெருமானுக்கு உரிய நாளாகக் கூறப்படுவதால் அன்று விரதம் இருந்து வழிபட்டால் பக்தர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்குமாம்.

அன்றைய தினம் முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று செவ்வரளி மாலை சாற்று வேண்டிக் கொண்டால் நமது குடும்பத்தில் ஒற்றுமை நிலையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் புதிதாக வீடு, மனை வாங்க யோகமும், கடன் சிக்கலிலிருந்து விடுபடலாம் எனவும் கூறப்படுகிறது.

முருகப்பெருமானை வேண்டிக் கொண்டு விரதம் இருந்து அன்று மாலை அதாவது கார்த்திகை நட்சத்திர திருநாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தால் கவலைகள் நீங்கி நல்லருள் முருகன் பெருமான் கொடுப்பார் என்பது ஐதீகம்.

டாபிக்ஸ்