தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Lsg Vs Rr Innings Break: கட்டுக்கோப்பான ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்! பினிஷிங்கில் சொதப்பிய லக்னோ பேட்ஸ்மேன்கள்

LSG vs RR Innings Break: கட்டுக்கோப்பான ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்! பினிஷிங்கில் சொதப்பிய லக்னோ பேட்ஸ்மேன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 27, 2024 09:27 PM IST

கேஎல் ராகுல் - தீபக் ஹூடா ஆகியோரின் 115 ரன்கள் பார்டனர்ஷிப் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. பினிஷிங்கில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், கட்டுக்கோப்பாக பந்து வீசி கடைசி 5 ஓவரில் 46 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் பவுலர்கள் விட்டுக்கொடுத்தனர்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கேஎல் ராகுல்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கேஎல் ராகுல் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இரு அணிகளுக்கு இடையே இந்த சீசனில் நடைபெற்ற முதல் மோதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என இரு அணிகளுக்கும் மாற்றம் எதுவும் செய்யவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 76, தீபக் ஹூடா 50 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதான பங்களிப்பை அளிக்கவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ட்ரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

கேஎல் ராகுல் - தீபக் ஹூடா பார்ட்னர்ஷிப்

லக்னோ ஓபனரான குவன்டைன் டி காக் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கடந்த போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் முதல் 2 ஓவர்களில் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஓபனர் கேஎல் ராகுல் - தீபக் ஹூடா இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

ராஜஸ்தான் ராய்ல்ஸ் பவுலர்களுக்கு எதிராக அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் இருவரும் தங்களது அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.

தீபக் ஹூடா 31 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அஸ்வின் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக பேட் செய்து வந்த கேஎல் ராகுல் 48 பந்தில் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர்கள் இருவரும் சேர்ந்த 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பினிஷிங் சொதப்பல்

லக்னோவின் அதிரடி பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரான் 11 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். தீபக் ஹூடா, கேஎல் ராகுல் அவுட்டான பிறகு லக்னோ அணியின் ரன்ரேட் குறைய தொடங்கியது. கடைசி கட்டத்தில் அதிரடியாக பேட் செய்ய முடியாமல் தவித்தனர்.

ஆயூஷ் பதோனி 18, க்ருணால் பாண்ட்யா 15 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அஸ்வினுக்கு விக்கெட்

இந்த சீசனில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் தவித்து வரும் ஸ்பின்னரான அஸ்வின் 7 போட்டிகளுக்கு பிறகு விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் அவர் வீழ்த்திய இரண்டாவது விக்கெட்டாக இது அமைந்துள்ளது.

முன்னதாக, முதல் போட்டியில் விக்கெட் எடுத்த அவர் தற்போது இந்த போட்டியில் மீண்டும் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point