தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Dc Vs Mi Result:உதிரிகளை அள்ளிக்கொடுத்த டெல்லி பவுலர்கள்! வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ்

DC vs MI Result:உதிரிகளை அள்ளிக்கொடுத்த டெல்லி பவுலர்கள்! வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 27, 2024 08:31 PM IST

நல்ல தொடக்கமும், பார்ட்னர்ஷிப்பும் அமையாதபோதிலும் திலக் வர்மா, ஹார்திக் பாண்ட்யா, டிம் டேவிட் அதிரடியால் வெற்றிக்கு அருகில் சென்று மும்பை இந்தியன்ஸ் அணி கோட்டை விட்டுள்ளது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் புள்ளிப்பட்டியலிலும் முன்னேறியுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் மோதல் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், டெல்லி அணி பதிலடி கொடுக்கும் போட்டியாக இந்த ஆட்டம் அமைந்திருந்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் பிருத்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜேவுக்கு பதிலாக குமார் குஷ்க்ரா, லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலாக லூக் உட் சேர்க்கப்பட்டார்.

டெல்லி அதிரடி பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜேக் ப்ராசர் மெக்குர்க் 84. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 48, ஷாய் ஹோப் 41, அபிஷேக் போரல் 36 ரன்கள் அடித்தனர்.

மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் லூக் உட், பியூஷ் சாவ்லா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.பும்ரா மட்டும் கட்டுப்பாட்டுடன் பந்து வீசி 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மற்ற பவுலர்கள் அனைவரும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர்.

மும்பை சேஸிங்

258 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் சீசனின் ஐந்தாவது வெற்றியை பெற்றது.

அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளி 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து 9வது இடத்திலேயே உள்ளது

டாப் ஆர்டர் சொதப்பல்

மும்பை இந்தியன்ஸ் ஓபனர்கள் இஷான் கிஷன், ரோகித் ஷ்ரமா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை தராமல் ஏமாற்றினர். இஷான் கிஷன் 20, ரோகித் 8 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

மூன்றாவது பேட்ஸ்மேனாக வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக தொடங்கினாலும் பெரிய ஸ்கோரை எடுக்காமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 13 பந்துகளில் அவர் 26 ரன்கள் எடுத்தார்.

திலக் வர்மா - ஹர்திக் பாண்ட்யா அதிரடி

மூன்று முக்கிய விக்கெட்டுகள் இழந்தபோதிலும் திலக் வர்மா - ஹர்திக் பாண்ட்யா இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர்களை அடித்து ரன் குவித்த திலக் வர்மா அரைசதத்தை பூர்த்தி செய்தார். 32 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த அவர் துர்தஷ்டவசமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இவருடன் இணைந்து ரன்களை குவித்த வந்த பாண்ட்யாவும் தன் பங்குக்கு அதிரடியை காட்டினார். 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து பாண்ட்யா அவுட்டானார்.

தேவைப்படும் ரன்ரேட் அதிகமாக இருந்த நேரத்தில் ஒரே ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என வான வேடிக்கை நிகழ்த்தினார். 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து வீழ்ந்தார்.

ராஷிக் சலாம் கலக்கல் பவுலிங்

டெல்லி அணியில் இம்பேக் வீரராக களமிறக்கப்பட்ட ராஷிக் சலாம் 4 ஓவரில் 34 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகேஷ் குமார் 59 ரன்களை வழங்கியபோதிலும் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இடது கை வேகப்பந்து வீச்சானர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிக முக்கியமாக டெல்லி பவுலர்கள் உதிரிகளை அள்ளி வழங்கினர். 17 உதிரிகளை கொடுத்ததோடு, 12 ஓய்ட் பந்துகளை வீசினர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point