CSK vs SRH Preview: சன்ரைசர்ஸ் அதிரடி பேட்டிங் - மாற்றி யோசிக்கும் சிஎஸ்கே! புள்ளிப்பட்டியலில் நிகழ போகும் மாற்றங்கள்
அதிரடியான பேட்டிங் லைன் அப்பை கொண்டிருக்கும் சிஎஸ்கே, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் என இரு அணிகளும் ஸ்பின் பவுலர்களை முக்கிய ஆயுதமாக இன்றைய போட்டியில் பயன்படுத்துவார்கள் என தெரிகிறது. இருப்பினும் பனிப்பொலிவு ஆட்டத்தை போக்க மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 46வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடங்கும் முன் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 8 போட்டிகளில் 5 வெற்றியை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த முதல் மோதலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அத்துடன் இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளன. சிஎஸ்கே இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே, சன் ரைசர்ஸ் அணியை பழிதீர்த்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திலும், புள்ளிப்பட்டியலில் தனது இடத்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடியும் சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டுள்ளது.
சிஎஸ்கே பிளான் என்ன?
வழக்கமாக ஸ்பின்னர்களை வைத்தே எதிரணிக்கு நெருக்கடி தரும் சிஎஸ்கே இந்த முறை வேகப்பந்து வீச்சாளர்களை முழுவதுமாக நம்பியுள்ளது. அத்துடன் பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும் சேப்பாக்கம் ஆடுகளமும் இந்த முறை பேட்டிங்குக்கு நன்கு ஒத்துழைக்கிறது. எனவே இதற்கு ஏற்ற திட்டத்துடன் சிஎஸ்கே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.