தமிழ் செய்திகள்  /  Astrology  /  Today Rasi Palan : Leo, Gemini People Will Get Excellent Results

Today Rasi Palan (02.06.2023) : சிம்மம் – மிதுன ராசிக்காரர்களுக்கு மிகச்சிறப்பான பலன் கிடைக்கும்

Priyadarshini R HT Tamil

Jun 02, 2023, 06:30 AM IST

Today Rasi Palan (02.06.2023) : சந்திரன் இன்று துலாம் மற்றும் விருச்சிக ராசியில், சுவாதி மற்றும் விசாக நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சிம்மம், மிதுன ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
Today Rasi Palan (02.06.2023) : சந்திரன் இன்று துலாம் மற்றும் விருச்சிக ராசியில், சுவாதி மற்றும் விசாக நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சிம்மம், மிதுன ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

Today Rasi Palan (02.06.2023) : சந்திரன் இன்று துலாம் மற்றும் விருச்சிக ராசியில், சுவாதி மற்றும் விசாக நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று சிம்மம், மிதுன ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மேஷம் - குடும்ப உறுப்பினர் அல்லது குழந்தையைப் பற்றி வருத்தம் ஏற்படலாம். வியாபார முன்னேற்றத்தால், மனம் மகிழ்ச்சியடையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சில கண்டிப்பான நடத்தைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழி அமையும். குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்டு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

சமீபத்திய புகைப்படம்

Today Rasi Palan : ‘நினைத்தது நடக்கும்.. நிதானம் தேவை’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Apr 29, 2024 04:30 AM

Elarai Sani 2024: ‘ஏழரை சனி முடிஞ்சாலும் ஏன் இப்படி?’ … தள்ளாடும் தனுசு! - குரு காப்பாற்றுவாரா?

Apr 28, 2024 08:12 PM

Sadhayam Nakshatram: ‘எதிரிகளை ஓட விடுவார்கள்!’ ராஜராஜன் பிறந்த சதயம் நட்சத்திரத்தின் பலன்கள்!

Apr 28, 2024 05:29 PM

மேஷத்தில் சுழற்றிவிடும் சுக்கிரன்.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் குளிப்பது உறுதி

Apr 28, 2024 05:10 PM

குரு அஸ்தமனத்தில் பலசாலியாக மாறும் ராசிகள்.. குரு பலத்தால் உச்சத்தில் அமர போகும் ராசிகள் இவர்கள்தான்

Apr 28, 2024 05:05 PM

Jackpot: ராகுவும் சூரியனும் பிரிந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்.. பண மழையில் சிக்கிக் கொண்டது யார்..!

Apr 28, 2024 01:42 PM

ரிஷபம் - குடும்ப உறுப்பினரின் எதிர்காலம் தொடர்பாக ஒரு பெரிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த எந்த ஒரு வேலையும் சகோதரர்களின் உதவியால் இன்று முடிக்க முடியும். சமூகத்தில் புகழ் பரவும். அண்டை வீட்டாருக்கு உதவ முன் வருவீர்கள்.

மிதுனம் - செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சமூகப்பணிகள் செய்பவர்களுக்கு மக்களிடம் மரியாதை கிடைக்கும். சில முக்கியமான வேலைகளுக்கு பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். வெளிநாடு தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் சில நல்ல செய்திகளைக் கேட்கலாம்.

கடகம் - பெற்றோரைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சற்று கவலையுடன் இருப்பர். இதனால் வேலை செய்ய மனமில்லாதவராக இருப்பீர்கள். காதல் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படலாம். அதனால் கவனம் தேவை. வீண் செலவு அதிகரிக்கும். மதியத்திற்குப் பிறகு நீங்கள் புதிய ஆற்றலுடன் செயல்படுவீர்கள். இது உங்கள் வேலையை விரைவுபடுத்தும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

சிம்மம் - பொருளாதார நிலை வலுவாக இருக்கும். சொத்து வாங்குதல், முதலீடு செய்தல் போன்ற விஷயங்களில் சாதக நிலை இருக்கும். கடன் வாங்குதல், கொடுப்பது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் ஆசிரியர்களின் நல்ல ஆதரவரைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அரசு தொடர்பான வேலைகள் முடிவடைந்து, குழந்தையின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கலாம்.

கன்னி - நிதி தொடர்பான விஷயங்களில் கவனம் தேலை. கடன் வாங்கும் நிலை ஏற்படும். வியாபார நிமித்தமாகப் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. பிள்ளையின் திருமணத்தில் தடையாக இருந்த விஷயங்கள் நீங்கும். தொழிலதிபர்கள் லாபம் ஈட்ட சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். நீங்கள் ஒரு புதிய சொத்து, வீடு அல்லது கடை போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கு இன்று உகந்த நாள். உத்யோகத்தில் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு எதிரிகள் பொறாமைப்படுவார்கள்.

துலாம் - துலாம் ராசியினர் வீட்டில் கோபத்தைக் கட்டுப்படுத்துவதும், அனுசரித்துச் செல்வதும் அவசியம். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். புதிய ஒப்பந்தங்கள் செய்யும் விஷயத்தில் கவனம் தேவை. ஆவணங்களை முறையாக சோதித்து, படித்து பார்க்கவும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனை தேவைப்படும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு பரிசு வாங்கி மகிழலாம்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நாளில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் உங்கள் வேலையைக் கெடுக்க வாய்ப்புள்ளது. சில வேலைகள் உங்கள் சிந்தனைக்கு மாறாக நடக்கும். நம்பகமான நபர் உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள். உங்கள் ரகசிய விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளிநாடு செல்ல அல்லது அங்கு தொழில் செய்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குழந்தையின் செயல்கள் பார்த்து மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு - வேலைகளில் தொய்வு ஏற்படுவதால் ஏமாற்றம் அதிகரிக்கும். தேவையில்லாத பயத்தினால் மனம் அமைதியின்றி இருக்கும். முதலீடுகளில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் மன அழுத்தத்தை உணர்வீர்கள். எனவே கோவத்தை கடுப்படுத்துங்கள். நாள் முழுவதும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கும். பொருளாதார நிலை வலுவடையும்.

மகரம் - நல்ல தகவல்கள் கிடைக்கும். உங்களின் திறன் அதிகரிக்கும். அறிவார்ந்து செயல்படுவீர்கள். பெரிய லாபத்தை எதிர்பார்த்து அதில் வெற்றியும் கிடைக்கும். மாலையில் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். சகோதர, சகோதரிகளின் திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பெரியவரின் உதவியால் நீங்கும்.

கும்பம் - முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வியாபாரத்தில் தடைப்பட்ட ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தாயாரின் உடல்நிலையில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். சில தவறான புரிதல்களால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு மன உளைச்சல் ஏற்படும். பணியிடத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சமூகப் பணிகளில் சுறுசுறுப்பாகப் பங்கேற்பீர்கள். பணம் கொஞ்சம் அதிகமாக செலவாக வாய்ப்புள்ளது.

மீனம் - குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்வீர்கள். பல பணிகள் ஒரே நேரத்தில் உங்கள் முன் வந்து பயமுறுத்தும். இருப்பினும் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்துமுடிக்கும் நம்பிக்கை ஏற்படும். அதற்காக நீங்கள் நிறைய அலைய வேண்டியிருக்கும். வணிகத்தைப் பொறுத்தவரை, மூத்த உறுப்பினரின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் மேம்படும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாலை நேரத்தை நண்பர்களுடன் உல்லாசமாக கழிப்பீர்கள்.

டாபிக்ஸ்