தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Csk Vs Srh Toss: மறுபடியும் டாஸில் தோற்ற ருதுராஜ்! சிஎஸ்கே பேட்டிங் - ஒரே ஸ்பின்னருடன் களமிறங்கும் சன் ரைசர்ஸ்

CSK vs SRH Toss: மறுபடியும் டாஸில் தோற்ற ருதுராஜ்! சிஎஸ்கே பேட்டிங் - ஒரே ஸ்பின்னருடன் களமிறங்கும் சன் ரைசர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 28, 2024 07:22 PM IST

வழக்கமாக முதல் பேட்டிங் செய்யும் சன் ரைசர்ஸ், இந்த முறை டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஸ்பின்னர் மயங்க் மார்கண்டேவுக்கு பதிலாக அப்துல் சமாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இரு அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த முதல் மோதலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அத்துடன் இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளன. சிஎஸ்கே இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே, சன் ரைசர்ஸ் அணியை பழிதீர்த்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திலும், புள்ளிப்பட்டியலில் தனது இடத்தை தக்க வைக்க வேண்டிய நெருக்கடியும் சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டுள்ளது.

சன் ரைசர்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். சன் ரைசர்ஸ் அணியில் மயங்க் மார்கண்டேவுக்கு பதிலாக அப்துல் சமாத் சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 14, சன் ரைசர்ஸ் 6 முறை வெற்றி பெற்றுள்ளன. சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கேவின் அதிகபட்ச ஸ்கோர் 223 என உள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக சன் ரைசர்ஸ் அதிகபட்ச ஸ்கோர் 192 என இருக்கிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் அணி இதுவரை வெற்றி பெற்றதே இல்லை. அத்துடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிஎஸ்கே சேப்பாக்கத்தில் கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. 200 ரன்களுக்கு மேல் அடித்து முதல் முறையாக சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நிலவிய பனிப்பொலிவு இருந்தது.

இந்த போட்டியில் விளையாட இருக்கும் ஆடுகளம் வறண்டு காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே பேட்ஸ்மேன்களுக்கும், பவுலிங்கில் ஸ்பின்னர்களுக்கும் உதவலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்கியா ரகானே, டேரில் மிட்செல், மொயின் அலி, ஷிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, மதிஷா பதிரனா, முஸ்தபிசுர் ரஹ்மான்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ்குமார் ரெட்டி, அப்துல் ஷமாத், ஷபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், நடராஜன்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point