தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ms Dhoni: ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்..சைலன்ட்டாக சாதனை படைத்த தோனி!

MS Dhoni: ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்..சைலன்ட்டாக சாதனை படைத்த தோனி!

Apr 29, 2024 07:11 AM IST Karthikeyan S
Apr 29, 2024 07:11 AM , IST

  • CSK vs SRH, IPL 2024: சென்னை சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்.28) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் மகேந்திர சிங் தோனி சிறந்த சாதனையை படைத்துள்ளார்.

சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியில் மகேந்திர சிங் தோனிக்கு பேட்டிங்கில் சிறப்பு எதுவும் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு இரண்டு பந்துகள் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. தோனி 1 பவுண்டரி உட்பட 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் கிரிக்கெட் உலகில் வேறு யாருமே செய்யாத சாதனையை தோனி படைத்தார். 

(1 / 6)

சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியில் மகேந்திர சிங் தோனிக்கு பேட்டிங்கில் சிறப்பு எதுவும் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு இரண்டு பந்துகள் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. தோனி 1 பவுண்டரி உட்பட 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் கிரிக்கெட் உலகில் வேறு யாருமே செய்யாத சாதனையை தோனி படைத்தார். (IPL)

ஐபிஎல் வரலாற்றில் 150ஆவது ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மற்றும் ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் தொடக்க சீசனில் இருந்து, தோனி ஒட்டுமொத்தமாக 259 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவரது அணி 150 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றி ஒரு கிரிக்கெட் வீரராக மகேந்திர சிங் தோனியின் 150 வது ஐபிஎல் போட்டியாகும். இதன் மூலம் தோனி ஒரு பெரிய மைல்கல்லை அமைத்துள்ளார் என்று கூறலாம். 

(2 / 6)

ஐபிஎல் வரலாற்றில் 150ஆவது ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மற்றும் ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் தொடக்க சீசனில் இருந்து, தோனி ஒட்டுமொத்தமாக 259 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் அவரது அணி 150 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றி ஒரு கிரிக்கெட் வீரராக மகேந்திர சிங் தோனியின் 150 வது ஐபிஎல் போட்டியாகும். இதன் மூலம் தோனி ஒரு பெரிய மைல்கல்லை அமைத்துள்ளார் என்று கூறலாம். (PTI)

ஒரு கிரிக்கெட் வீரராக அதிக ஐபிஎல் போட்டிகளை வென்றதன் அடிப்படையில் தோனிக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜடேஜா 2008 முதல் மொத்தம் 235 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த அணி 133 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் 4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார். 

(3 / 6)

ஒரு கிரிக்கெட் வீரராக அதிக ஐபிஎல் போட்டிகளை வென்றதன் அடிப்படையில் தோனிக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜடேஜா 2008 முதல் மொத்தம் 235 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த அணி 133 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் 4 ஓவர்களில் 22 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார். (PTI)

ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றதன் அடிப்படையில் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். ஜடேஜாவை விட அதிக போட்டிகளில் விளையாடியிருந்தாலும். ரோஹித் 2008 முதல் மொத்தம் 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

(4 / 6)

ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்றதன் அடிப்படையில் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டாவது இடத்தில் உள்ளனர். ஜடேஜாவை விட அதிக போட்டிகளில் விளையாடியிருந்தாலும். ரோஹித் 2008 முதல் மொத்தம் 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.(AFP)

சுரேஷ் ரெய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிக ஐபிஎல் போட்டிகளில் வென்றவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ரெய்னா மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 125 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தினேஷ் கார்த்திக் 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 125 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். 

(5 / 6)

சுரேஷ் ரெய்னா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிக ஐபிஎல் போட்டிகளில் வென்றவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ரெய்னா மொத்தம் 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 125 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தினேஷ் கார்த்திக் 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 125 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். (AFP)

ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். அவர் ஏற்கனவே அதிக வெற்றிகள் என்ற சாதனையை வைத்திருந்தார். தோனி கேப்டனாக 133 ஐபிஎல் போட்டிகளில் வென்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த வீரரும் 100 போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை.

(6 / 6)

ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார். அவர் ஏற்கனவே அதிக வெற்றிகள் என்ற சாதனையை வைத்திருந்தார். தோனி கேப்டனாக 133 ஐபிஎல் போட்டிகளில் வென்றுள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த வீரரும் 100 போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை.(PTI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்