தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Csk Vs Srh Result: "துண்டு ஒரு தடவதான் விழும்" சிஎஸ்கே கோட்டையில் சரிந்து விழுந்த சன் ரைசர்ஸ்!புள்ளிப்பட்டியலிலும் சரிவு

CSK vs SRH Result: "துண்டு ஒரு தடவதான் விழும்" சிஎஸ்கே கோட்டையில் சரிந்து விழுந்த சன் ரைசர்ஸ்!புள்ளிப்பட்டியலிலும் சரிவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 28, 2024 11:37 PM IST

ஐபிஎல் போட்டிகளில் 150 வெற்றியில் இடம்பிடித்த வீரர் என்ற தனித்துவ சாதனையை புரிந்துள்ளார்.

விக்கெட் வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டேவை பாராட்டும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்
விக்கெட் வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டேவை பாராட்டும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இரு அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த முதல் மோதலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அத்துடன் இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளன. சிஎஸ்கே இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சன் ரைசர்ஸ் அணியில் மயங்க் மார்கண்டேவுக்கு பதிலாக அப்துல் சமாத் சேர்க்கப்பட்டிருந்தார்.

சிஎஸ்கே அதிரடி பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ருதுராஜ் கெய்வாட் 98, டேரில் மிட்செல் 52 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக பேட் செய்த ஷிவம் டூபே 39 ரன்கள் அடித்தார்.

சன் ரைசர்ஸ் பவுலர்களில் புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.

சன் ரைசர்ஸ் சேஸிங்

213 ரன்கள் சேஸ் செய்ய களமிறங்கிய சன் ரைசர்ஸ் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. இதன் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலிலும் மூன்றாவது இடத்துக்கு விர்ரென முன்னேறியது. 

இது தோனியின் 150 வெற்றியாகவும் அமைந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளில் இருந்த முதல் வீரர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.  

சன் ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக ஐடன் மார்கரம் 32, ஹென்ரிச் கிளாசன் 20 ரன்கள் அடித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் 20 ரன்கள் கூட அடிக்காமல் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

சிஎஸ்கே பவுலர்கள் துஷார் தேஷ்பாண்டே 4, மதிஷா பதிரனா 2, முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தேஷ்பாண்டே கலக்கல் பவுலிங்

சன் ரைசர்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களான ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை பவர்ப்ளே ஓவர்களிலேயே தேஷ்பாண்டே தூக்கினார். இதனால் சன் ரைசர்ஸுக்கு சரியான தொடக்கம் அமையாமல் போனது. நல்ல பார்மில் இருந்து வந்த ட்ராவிஸ் ஹெட் 13,  அபிஷேக் ஷர்மா 15 ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 

அதேபோல் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட அன்மோல் ப்ரீத் சிங் விக்கெட்டையும், அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கைப்பற்றினார்.

பவர்ப்ளே முடிவதற்குள் முதல் 3 விக்கெட்டுகளை இழந்ததால் சன் ரைசர்ஸ் தடுமாறியது.  

ஐடன் மார்க்ரம் பொறுமையாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டபோதிலும், 32 ரன்கள் எடுத்திருந்தபோது பதிரனா பந்தில் க்ளீன் போல்டு ஆனார். 

அதேபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசன் 20 ரன்களில் பதிரனா பந்தில் அவுட்டானர். மற்ற பேட்ஸ்மேன்கள் 20 ரன்களை கூட நெருங்காமல் அடுத்தடுத்து அவுட்டாகி பெவிலியின் திரும்பினார்கள்.

ஐந்து கேட்ச்களை பிடித்த மிட்செல்

பேட்டிங்கில் கலக்கிய டேரில் மிட்செல், ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை அடித்தார். இதை்தொடர்ந்து பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 5 கேட்ச்களை பிடித்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணியில் 5 கேட்ச்கள் பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத பீல்டராக மாறியுள்ளார் மிட்செல்.

இரண்டு தொடர் தோல்வி, உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் ஒரு தோல்விக்கு பின்னர் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பக்கம் திரும்பியுள்ளது சிஎஸ்கே

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point