தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Gt Vs Rcb Result: குஜராத் ஸ்பின் தாக்குதலுக்கு எதிராக வில் ஜேக்ஸ் வேற லெவல் பேட்டிங்! வெற்றி பயணத்தை தொடரும் ஆர்சிபி

GT vs RCB Result: குஜராத் ஸ்பின் தாக்குதலுக்கு எதிராக வில் ஜேக்ஸ் வேற லெவல் பேட்டிங்! வெற்றி பயணத்தை தொடரும் ஆர்சிபி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 28, 2024 07:47 PM IST

குஜராத் பவுலர்களை பந்துவீச்சை தவிடுபொடியாக்கும் விதமாக பேட் செய்தார் வில் ஜேக்ஸ். அவருடன் விராட் கோலியும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 4 ஓவர் மீதமிருக்க 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை ஆர்சிபி அணி பெற்றுள்ளது.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் வில் ஜேக்ஸ்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் வில் ஜேக்ஸ் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலாக இந்த போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டியில் குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆர்சிபியில், லாக்கி பெர்குசனுக்கு பதிலாக கிளென் மேக்ஸ்வெல் அணிக்கு திரும்பியுள்ளார்.

குஜராத் ரன் குவிப்பு

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்ன்ஸ் 20 ஓவரில் விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 84, ஷாருக்கான் 58 ரன்கள் அடித்தனர்.

ஆர்சிபி அணி ஸ்விப்னிஸ் சிங், முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ஆர்சிபி சேஸிங்

201 ரன்கள் இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி 16 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் அடித்தது. இதனால் 24 பந்துகள் எஞ்சியிருக்க, 9 விக்கெட் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றது. இந்த போட்டிக்கு பின்னர் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றமும் நிகழவில்லை.

அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 100, விராட் கோலி 70 ரன்கள் எடுத்தனர். குஜராத் பவுலர்களில் ஸ்பின்னர் சாய் கிஷோர் ஒரு விக்கெட் எடுத்தார்.

டூ பிளெசிஸ் ஏமாற்றம்

ஆர்சிபி கேப்டனும், ஓபனருமான டூ பிளெசிஸ் வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை தந்தார். ஆனாலும் நிலைத்து பேட் செய்யாமல் 12 பந்துகளில் 24 ரன்கள் அடித்து அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியை அடித்தார்.

வில் ஜேக்ஸ் அதிரடி

மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய வில் ஜேக்ஸ் தொடக்கம் முதலே குஜராத் பவுலர்களுக்கு எதிராக அதிரடியாக பேட் செய்ய தொடங்கினார். ஸ்பின்னர்களை வைத்து ஆர்சிபி பேட்ஸ்மன்களை கட்டுப்படுத்தலாம் என்ற குஜராத் டைட்டன்ஸ் திட்டத்தை தவிடுபொடியாக்கினார்.

ரஷித் கான், நூர் அகமது, சாய் கிஷோர் ஓவர்களில் சிக்ஸர்களை பறக்க விட்டார். ரஷித் கான் ஒரே ஓவரில் 29 ரன்கள் அடித்தார். 41 பந்துகளில் சதமடித்த அவர், சிக்ஸருடன் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 10 சிக்ஸர்களை விளாசினார்.

அணியின் ஸ்கோர் 200 என சமநிலையில் இருந்தபோது வில் ஜேக்ஸ் 94 ரன்களுடன் பந்தை எதிர்கொண்டார். அப்போது சிக்ஸ் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். அரைசதத்தை 31 பந்துகளில் அடித்த வில் ஜேக்ஸ் அடுத்த 10 பந்துகளில் இன்னொரு 50 ரன்களை அடித்தார். இரண்டாவது 50 ரன்களில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அடித்தார்.

கோலி அரைசதம்

ஓபனிங்கில் களமிறங்கி தனது பாணியில் அதிரடியும், நிதானமும் கலந்து பேட் செய்து வந்த விராட் கோலி, வில் ஜேக்ஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதமடித்தார். 44 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்த கோலி தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point