Sadhayam Nakshatram: ‘எதிரிகளை ஓட விடுவார்கள்!’ ராஜராஜன் பிறந்த சதயம் நட்சத்திரத்தின் பலன்கள்!
- “ஆண்களாக இருந்தால் பெண்களிடமும், பெண்களாக இருந்தால் ஆண்களிடமும் இவர்களுக்கு அதிக ஈடுபாடுகள் இருக்கும். இவர்கள் பொய்பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். இவர்களை திருப்தி செய்வது கடினம்”
- “ஆண்களாக இருந்தால் பெண்களிடமும், பெண்களாக இருந்தால் ஆண்களிடமும் இவர்களுக்கு அதிக ஈடுபாடுகள் இருக்கும். இவர்கள் பொய்பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். இவர்களை திருப்தி செய்வது கடினம்”
(1 / 7)
சனியின் ஆதிக்கம் பெற்ற கும்ப ராசியில் முழு நட்சத்திரமாக உள்ள சதயம் நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் உள்ளார்.
(2 / 7)
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீரர்களாக இருப்பார்கள். எப்பேற்பட்ட சிக்கல்களையும் வெற்றி பெறக்கூடிய திறன் இவர்களுக்கு உண்டு. எப்படிப்பட்டி எதிரிகளாக இருந்தாலும், சூழ்ச்சியால் வெல்லக்கூடிய மனோ பலத்தையும், உடல் பலத்தையும் ஒருங்கே பெற்றவர்களாக இவர்கள் விளங்குவார்கள்.
(3 / 7)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசதி வாய்ப்பு மற்றும் செல்வச்செழிப்பு மிக்கவர்களாக திகழ அதிக வாய்ப்பு உண்டு.
(4 / 7)
அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாகவோ அல்லது அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுடன் நட்பாகவோ இவர்கள் இருப்பார்கள்.
(5 / 7)
சதயம் நட்சத்திரத்தில் எம தர்ம ராஜா பிறந்து உள்ளதாக புராணங்கள் கூறுகிறது. மேலும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்தான்.
(6 / 7)
சதயம் நட்சத்திரத்தின் விலங்காக பெண் குதிரை உள்ளது. இதன் விருட்சமாக கடம்பு மரமும், பறவையாக அண்டம் காகமும் உள்ளது.
மற்ற கேலரிக்கள்