தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Temple Festival :பங்குனி உத்திர திருவிழா உற்சாகம் – திருவாரூரில் ஆழித்தேரோட்டம்

Temple Festival :பங்குனி உத்திர திருவிழா உற்சாகம் – திருவாரூரில் ஆழித்தேரோட்டம்

Priyadarshini R HT Tamil

Apr 01, 2023, 11:09 AM IST

புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் மார்ச் 9ம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 1ம் தேதி) நடைபெற்றது.
புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் மார்ச் 9ம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 1ம் தேதி) நடைபெற்றது.

புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் மார்ச் 9ம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 1ம் தேதி) நடைபெற்றது.

ஆழித்தேர்வித்தகனை நான் கண்டது ஆரூரே”என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்”என சேக்கிழாரும் பாடியசிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும்.

சமீபத்திய புகைப்படம்

Pooradam Nakshatram: ’வருண பகவான் பிறந்த பூராடம் நட்சத்திரம்!’ பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

May 05, 2024 04:48 PM

குரு வெறியாட்டம் ஆடுகிறார்.. கத்தி கதறவிடப்போகும் ராசிகள்.. முரட்டு அடி தேடி வருகிறது

May 05, 2024 03:57 PM

பண மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசியில் இருக்கா?.. புதன் உதயத்தில் சூறையாட்டம்

May 05, 2024 03:50 PM

குரு பணக்கடலில் கட்டி தொங்கவிடப் போகிறார்.. இன்று ராஜ வாழ்க்கையில் நுழையும் ராசிகள்.. மகாலட்சுமியோடு வாழ்வது உறுதி

May 05, 2024 02:45 PM

முரட்டு அடி அடிக்கப் போகும் செவ்வாய்.. ஜூன் மாதம் வரை சிக்கிக்கொண்ட ராசிகள்.. அங்காரக யோகத்தில் கஷ்டப்படுவது உறுதி

May 05, 2024 01:26 PM

பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் அதிர்ஷ்டம் கொண்ட ராசிகள்.. பணக்காரராக மாறப் போவது உறுதி.. உங்க ராசி என்ன?

May 05, 2024 12:11 PM

சைவசமய மரபில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவது திருவாரூர் தியாகராஜர் கோயில். இக்கோயிலில் ஆழித்தேர்மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது. மக்கள் கடலில் உருண்டு வரும் பெரிய தேர் என்பதால் மக்கள்இத்தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர்.

புகழ்பெற்றதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது. இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று (ஏப்ரல் 1ம் தேதி) நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டுபரவசப்பட்டிருப்பதாகவும்வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இந்ததேர் சிம்மாசனம், பத்மாசனம் என 5 வகை ஆசனங்களை கொண்டு 5 அடுக்குகளாக 36 அடி உயரத்தில்முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்பட்டுஅழகிய தேராக நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் சேர்த்து இதன் எடை கிட்டத்தட்ட 300 டன்னாக உள்ளது. இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்ததேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள்மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி நடைபெற்றுள்ளது. அதற்குமேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் எனமொத்தம் 96 இடி உயரத்தில் இந்ததேர் கட்டப்பட்டுள்ளது.

அலங்கரிக்கப்பட்டபின் தேரின் எடை சுமார் 350 டன் ஆகும். அசைந்து வரும் ஆழித்தேர் பார்ப்பவர் கண்களுக்கு பரவசம் தரும். தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வடக்கயிறின் நீளமும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமாகும். இந்த தேர் 36 அடி உயரமும், 36 அடி அகலமும் கொண்டது. ஆசியாவிலேயே பெரியதேர், ஆழித்தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர், அம்பாள் தேர், முருகர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம்ஐந்து தேர்கள் உள்ளது.

இந்ததேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக 600 முட்டுக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையால் ஆனவை. இன்று காலை ஐந்தரை மணிக்கு முருகர், விநாயகர் தேர்கள் இழுக்கப்பட்டது.

பின்னர் ஏழரை மணிக்கு பெரிய தேர்எனப்படும் தியாகராஜ சுவாமியை கொண்ட ஆழித்தேரினை வடம் பிடித்து மாவட்டஆட்சியர் சாருஸ்ரீ தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். 

ஆழிதேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். தேர் திருவிழாவை முன்னிட்டுஇன்று உள்ளூர் விடுமுறை என்பதால் திருவாரூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

ஆழித்தேரினைஆரூரா, தியாகேசா கோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள்  வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். தேரின் முன்னும் பின்னுமாக டிராக்டர்கள் தேரை ஓட்டுவதற்கு பக்கபலமாகஇருப்பதும், காலையில் கிளம்பிய தேர் மாலை நிலைக்குவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்