தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Rcb Vs Gt Preview: பழி தீர்க்குமா குஜராத் டைட்டன்ஸ்-ஆர்சிபியை மீண்டும் இன்று சந்திக்கிறது ஜிடி

RCB vs GT Preview: பழி தீர்க்குமா குஜராத் டைட்டன்ஸ்-ஆர்சிபியை மீண்டும் இன்று சந்திக்கிறது ஜிடி

Manigandan K T HT Tamil
May 04, 2024 05:51 AM IST

RCB vs GT Preview: இன்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியை எதிர்கொள்கிறது.

RCB vs GT Preview: பழி தீர்க்குமா குஜராத் டைட்டன்ஸ்-ஆர்சிபியை மீண்டும் இன்று சந்திக்கிறது ஜிடி
RCB vs GT Preview: பழி தீர்க்குமா குஜராத் டைட்டன்ஸ்-ஆர்சிபியை மீண்டும் இன்று சந்திக்கிறது ஜிடி

ட்ரெண்டிங் செய்திகள்

ஜிடி தனது 10 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் எட்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

ஆர்சிபி மற்றும் ஜிடி நேருக்கு நேர் சாதனைகள்

பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் இதுவரை நான்கு ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அணி 2 போட்டிகளிலும், ஜிடி அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. குஜராத்துக்கு எதிராக இதுவரை ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோர் 206 ஆகும், மேலும் பெங்களூருக்கு எதிராக ஜிடியின் அதிகபட்ச ஸ்கோர் 200 ஆகும்.

இவ்விரு அணிகளும் கடைசியாக இந்த ஆண்டு ஏப்ரல் 28 அன்று சந்தித்தன. 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு சேஸிங் செய்த பெங்களூரு அணி 16 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி அணிக்காக வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

RCB vs GT பிட்ச் ரிப்போர்ட்

இது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம். அதன் விரைவான அவுட்ஃபீல்ட் மற்றும் குறுகிய பவுண்டரிகள் அணிகளுக்கு நிறைய ரன்கள் எடுக்க உதவுகின்றன.

முந்தைய போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் விராட் கோலி (43 பந்துகளில் 51 ரன்கள்), ரஜத் படிதார் (20 பந்துகளில் 50 ரன்கள்), கேமரூன் கிரீன் (20 பந்துகளில் 37*) ஆகியோர் ஜொலித்தனர்.

ஷாபாஸ் அகமது (37 பந்துகளில் 40*), அபிஷேக் சர்மா (13 பந்துகளில் 31 ரன்கள்), பாட் கம்மின்ஸ் (15 பந்துகளில் 31 ரன்கள்) ஆகியோர் எஸ்.ஆர்.எச் அணிக்காக சிறப்பாக விளையாடினர், ஆனால் அவர்களால் 20 ஓவர்களில் 171/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

RCB vs GT வானிலை

பெங்களூருவில் மாலையில் வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். ஈரப்பதம் சுமார் 34% இருக்கும். ஓரளவு மேகமூட்டம் இருக்கும் என்றாலும், மழைக்கு வாய்ப்பில்லை.

ஆர்சிபி vs ஜிடி கணிப்பு

கூகுளின் வெற்றி நிகழ்தகவின் படி, பெங்களூரு தனது 11 வது போட்டியில் ஜிடியை தோற்கடிக்க 54% வாய்ப்பு உள்ளது.

கூகுளின் வெற்றி நிகழ்தகவு
கூகுளின் வெற்றி நிகழ்தகவு (Google)

இருப்பினும் குஜராத் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 17வது சீசன் வந்துவிட்டது. 2008ல் தொடங்கிய இந்த மெகா லீக், ஏற்கனவே 16 சீசன்களை நிறைவு செய்துள்ளது. 8 அணிகளுடன் தொடங்கிய இந்த லீக்கில் தற்போது பத்து அணிகள் பங்கேற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் 2022ல் பங்கேற்றன. கடந்த இரண்டு சீசன்களில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஐபிஎல் உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்று அறியப்படுகிறது. இந்த மெகா லீக் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

IPL_Entry_Point