LSG vs KKR Preview: யார் பலசாளி என்பதை நிருபிக்கும் போட்டி! ப்ளேஆஃப் ரேஸில் முந்த லக்னோ, கொல்கத்தா பலப்பரிட்சை
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Lsg Vs Kkr Preview: யார் பலசாளி என்பதை நிருபிக்கும் போட்டி! ப்ளேஆஃப் ரேஸில் முந்த லக்னோ, கொல்கத்தா பலப்பரிட்சை

LSG vs KKR Preview: யார் பலசாளி என்பதை நிருபிக்கும் போட்டி! ப்ளேஆஃப் ரேஸில் முந்த லக்னோ, கொல்கத்தா பலப்பரிட்சை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 05, 2024 07:00 AM IST

யார் பலசாளி, ப்ளேஆஃப் வாய்ப்பை முதலில் பெறப்போவது யார் என்பதை நிருபிக்கும் விதமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டி அமையவுள்ளது. முதல் மோதலில் நடத்த தோல்விக்கு லக்னோ சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்
லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 போட்டிகளில் 6 வெற்றியுடன் மூன்றாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 போட்டிகளில் 7 வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. கொல்கத்தை நைட் ரைடர்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பு உறுதி செய்துவிடும்.

லக்னோ அணி வெற்றியை பெற்றால் கொல்கத்தாவுடன் புள்ளிக்கணக்கில் சமநிலை பெறும்.

இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் மோதலில் கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே தங்களது உள்ளூர் மைதானத்தில் லக்னோ அணி பதிலடி கொடுக்க இன்று முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்

லக்னோ அணியில் மாற்றங்கள்

ஓபனர் குவன்டைன் டி காக் காயத்தால் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக ஆஷ்டன் டர்னர் வாய்ப்பை பெறலாம். அதேபோல் அதிவேக பந்து வீச்சாளர் மயங்க யாதவ் இன்னும் முழுமையாக காயத்திலிருந்து குணமாகவில்லை.

தற்போதைய நிலையில் பேட்டிங், பவுலிங் என சிறப்பாக செயல்பட்டு வரும் லக்னோ, கொல்கத்தாவுக்கு எதிராக அதை தொடரும் என எதிர்பார்க்கலாம். அத்துடன் முதல் மோதலில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்ததால் இன்று பழிதீர்க்க முயற்சிக்கும்.

தடைக்கு பின் அணிக்கு திரும்பும் ராணா

இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர் ஹர்ஷித் ராணா ஒரு போட்டி விளையாட தடை பெற்றார். தற்போது தடைக்கு பின் இன்றைய போட்டியில் அவர் அணிக்கு திரும்புகிறார். லக்னோ போல் பேட்டிங், பவுலிங்கில் நல்ல நிலையில் இருந்து வரும் கொல்கத்தா, கடும் சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

பிட்ச் நிலவரம்

செம்மண், கருப்பு மணல் என இரு பிட்ச்கள் உள்ளன. அத்துடன் ஸ்பின் பவுலிங்குக்கு சாதகமாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விததத்தில் மெதுவாக செயல்படக்கூடியதாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கலாம்.

லக்னோ - கொல்கத்தா இதுவரை

இந்த இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் லக்னோ 3, கொல்கத்தா ஒரு முறை வென்றுள்ளன. இருப்பினும் டாப் மூன்று இடங்களில் இருக்கும் இந்த இரு அணிகளும் யார் பலசாளி என்பதை நிருபிக்கும் போட்டியாக இது அமையவுள்ளது.

அத்துடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேற லக்னோவுக்கு முக்கியமான போட்டியாக இன்றைய ஆட்டம் அமைகிறது. டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி குவாலிபயர் 1 போட்டியில் பங்கேற்று நேரடியாக பைனல் செல்லும் வாய்ப்பு இருப்பதால் அதற்காக லக்னோ, கொல்கத்தா இடையே போட்டா போட்டி நிலவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.