தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Csk Vs Pbks Preview: கட்டாய வெற்றிக்கான போட்டி - சிஎஸ்கேவில் முக்கிய மாற்றங்கள் - தரம்சாலா மேஜிக் நிகழ்த்துவாரா தோனி?

CSK vs PBKS Preview: கட்டாய வெற்றிக்கான போட்டி - சிஎஸ்கேவில் முக்கிய மாற்றங்கள் - தரம்சாலா மேஜிக் நிகழ்த்துவாரா தோனி?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 05, 2024 06:30 AM IST

முக்கிய பவுலர்களான முஸ்தபிசுர் ரஹ்மான், தீபக் சஹார் இல்லாத நிலையில் சிஎஸ்கே அணியில் பவுலிங் மாற்றம் இருக்கும். தீக்‌ஷனா, சாண்ட்னர், முகேஷ் செளத்ரி ஆகியோரில் இருவர் வாய்ப்பை பெறலாம். பஞ்சாப், சிஎஸ்கே என இரு அணிகளுக்கும் ப்ளேஆஃப் வாய்ப்புக்கான முக்கிய போட்டியாக இன்றையை ஆட்டம் உள்ளது.

பஞ்சாப் கிஙஸ் - சிஎஸ்கே இன்று மோதல்
பஞ்சாப் கிஙஸ் - சிஎஸ்கே இன்று மோதல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டிகளில் 4 வெற்றியுடன் 8வது இடத்திலும், சிஎஸ்கேவுக்கு 10 போட்டியில் 5 வெற்றியுடன் 5வது இடத்திலும் இருந்து வருகிறது. மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்க இருக்கும் நிலையில், சிஎஸ்கேவுக்கு இந்த சீசனில் முதல் மாலை நேர போட்டியாக உள்ளது.

சிஎஸ்கே பவுலிங்கில் முக்கிய மாற்றங்கள்

கடந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக துஷார் தேஷ்பாண்டே விளையாடவில்லை. தீபக் சஹார் முதல் ஓவர் கூட முழுமையாக வீச முடியாமல் வெளியேறினார். அதேபோல் அணியின் ஸ்டிரைக் பவுலரான முஸ்தபிசுர் ரஹ்மான் வங்கேதசம் திரும்பியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் துஷார் தேஷ்பாண்டே அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் மகேஷ் தீக்‌ஷானா அல்லது மிட்செல் சாண்ட்னர் ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதேபோல் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் செளத்ரியும் சேர்க்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சொதப்பிய சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தரம்சாலாவில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடிய ருத்தாண்டவ இன்னிங்ஸை யாராலும் மறக்க முடியாது. எனவே அதுபோன்றதொரு மேஜிக் ஆட்டத்தை தோனி அல்லது வேறு யாரும் வெளிப்படுத்தவார்களா என்பது ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

பக்காவான அணியாக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் இன்னும் முழுமையாக பிட்னஸ் பெறாத நிலையில், அவர் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பஞ்சாப் கிங்ஸ் கடந்த போட்டியில் களமிறங்கிய அதே வெற்றி கூட்டணியுடன் இந்த போட்டியிலும் விளையாடும் என தெரிகிறது.

வேகப்பந்து வீச்சுக்கு ரபாடா, அர்ஷ்திப் சிங், ஸ்பின் பவுலிங்குக்கு ராகுல் சஹார், ஹர்ப்ரீத் பிரார் ஆகியோரை வைத்து சிஎஸ்கே பேட்டிங் வரிசையை மிரட்டலாம்.

பிட்ச் நிலவரம்

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக தரம்சாலா அமைந்திருக்கும். அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் வேட்டை நிகழ்த்துவர்கள். சேஸிங் சற்று கடினமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் 29 போட்டிகள் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சிஎஸ்கே 15, பஞ்சாப் கிங்ஸ் 14 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. கடைசியாக 2021 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை சிஎஸ்கே வீழ்த்தியுள்ளது. அதன் பின்னர் நடந்த 5 மோதல்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக சிஎஸ்கேவை ஐந்து முறை வீழ்த்திய அணி என்ற பெருமையை பஞ்சாப் கிங்ஸ் பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் மோதிக்கொண்டன். சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

ப்ளேஆஃப் தகுதியை பெற சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் என இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது. அதுவும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வாழ்வா? சாவா? ஆட்டமாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point