PBKSvCSK: பவுலர்களின் எழுச்சி.. பஞ்சாப் கிங்ஸ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Pbksvcsk: பவுலர்களின் எழுச்சி.. பஞ்சாப் கிங்ஸ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

PBKSvCSK: பவுலர்களின் எழுச்சி.. பஞ்சாப் கிங்ஸ் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

Marimuthu M HT Tamil
May 05, 2024 08:42 PM IST

PBKSvCSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது.

மே 5, 2024 அன்று தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் அணிகள் வெற்றி பெற்றதைக் கொண்டாடினர்.
மே 5, 2024 அன்று தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்கள் அணிகள் வெற்றி பெற்றதைக் கொண்டாடினர். (AFP)

அதன்படி, அஜின்கிய ரஹானே மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அதில் அஜின்கிய ரஹானே 9 ரன்கள் எடுத்தபோது, அர்ஷித் சிங்கின் பந்தில் அவுட்டானார்.

ருதுராஜ் கெய்க்வாட், 32 ரன்கள் எடுத்தபோது, சாஹரின் பவுலிங்கில் அவுட்டானார். மூன்றாவதாக மிட்செல்லும், நான்கவதாக ஷிவம் துபே ஆகியோரும் களமிறங்கினர்.

மிட்செல் 19 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்தபோது, படேலின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். நான்காவது வீரரான ஷிவம் துபே, சாஹரின் பந்தில் டக் அவுட் ஆனார். 

ஐந்தாவது வீரராக களமிறங்கிய மொயின் அலி 17 ரன்கள் எடுத்திருந்தபோது, குரானின் பந்தில் அவுட்டானார். 

ஆறாவதாக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, அதிரடியாக விளையாடினார். 26 பந்துகளுக்கு 43 பந்துகள் விளாசினார். அதில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடக்கம்.

7ஆவதாக களமிறங்கிய மிட்செல் சான்ட்னெர், சாஹரின் பந்தில் 11 ரன்கள் எடுத்தபோது பெவிலியன் திரும்பினார்.

அதன்பின், இறங்கிய சர்துல் தாக்கூர் 17 ரன்கள் எடுத்தபோது, படேலின் பந்தில் அவுட்டானார்.

அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி ரன் எதுவும் எடுக்காமல், பட்டேலின் பந்தில் டக் அவுட் ஆனார். அதன்பின், துஷார் தேஷ்பாண்டே ரன் எதுவும் எடுக்காமலும், ரிச்சர்ட் க்ளெசன் வெறும் 2 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில், ஹர்ஷல் பட்டேல் மூன்று விக்கெட்களை எடுத்தார். அதேபோல், ராகுல் சாஹர் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.

இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது.

குறிப்பாக, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பெயர்ஸ்டவ் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் சிங், 30 ரன்கள் எடுத்தபோது, ஜடேஜாவின் பந்தில் அவுட்டானார். ஜானி பெயர்ஸ்டவ் 7 ரன்கள் எடுத்தபோது, தேஷ் பாண்டேவின் பந்தில் அவுட்டானார். அதன்பின், களமிறங்கிய ரிலே ரோஸோவ், ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

நான்காவதாக களமிறங்கிய ஷசங் சிங், 27 ரன்கள் எடுத்தபோது, சாண்ட்னெர் பந்தில், சிமர்ஜித் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

ஐந்தாவதாக களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன், சாம் கர்ரன், 7 ரன்கள் எடுத்தபோது, ஜடேஜாவின் பவுலிங்கில் அவுட்டானார். அதன்பின், ஆறாவதாக களமிறங்கிய ஜிதேஷ் ஷர்மா, சிமர்ஜிட் சிங்கின் பவுலிங்கில் எம்.எஸ். தோனியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதனையடுத்து களமிறங்கிய ஏழாவதாக களமிறங்கிய ஆஷ்டோஷ் சர்மா மூன்று ரன்களுடனும், ஹர்ஷல் படேல் 12 ரன்களுடனும், ராகுல் சாஹர் 16 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். குறிப்பாக, ஹர்பிரீட் பிரார் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும், ககிசோ ரபடா 11 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆனார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர்களான ரவீந்திர ஜடேஜா, 20 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது. சிமர்ஜீட் சிங் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். அதன்பின், துஷர் தேஷ்பாண்டே 35 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.