தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Kkr Vs Mi Live Score: மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர்! மற்றவர்களை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள்

KKR vs MI Live Score: மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்க ஸ்கோர்! மற்றவர்களை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 03, 2024 09:28 PM IST

கொல்கத்தா பேட்ஸ்மன்களில் வெங்கடேஷ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகியோர் மட்டும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்துள்ளனர். வெங்கடேஷ் ஐயர் பொறுப்பான பேட்டிங்கால் கொல்கத்தா 169 ரன்கள் குவித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளகளான பும்ரா, பாண்ட்யா, துஷாரா ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்தனர்

பந்தை பவுண்டரிக்கு அடிக்கும் வெங்கடேஷ் ஐயர்
பந்தை பவுண்டரிக்கு அடிக்கும் வெங்கடேஷ் ஐயர் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டியாக இது அமைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் நமன் திர், நுவான் துஷாரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ரோகித் ஷர்மா இம்பேக்ட் வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

மும்பை பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தை நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 169 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய மனீஷ் பாண்டே 42 ரன்கள் அடித்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக அங்கிரிஷ் ரகுவன்சி மட்டுமே இரட்டை இலக்கத்தில் 13 ரன்கள் அடித்திருந்தார். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் நுவான் துஷாரா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா ஒரு விக்கெட்டை எடுத்தார்.

பேட்டிங் சொதப்பல் 

மும்பை பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தவித்த கொல்கத்த நைட் ரைடர்ஸ் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்திலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். 

ஓபனிங்கில் அதிரடி காட்டி வந்த சால்ட் 5, நரேன் 8, ஷ்ரேயாஸ் ஐயர் 6 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக அவுட்டாகி ஏமாற்றினார்கள்.

வெங்கடேஷ் ஐயர் பொறுப்பான பேட்டிங்

ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் பொறுப்புடன் பேட் செய்து ரன் குவித்து வந்தார் வெங்கடேஷ் ஐயர். அரைசதத்தை பூர்த்தி செய்து கடைசி ஓவர் வரை பேட் செய்தார். பும்ரா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவர் ஐந்தாவது பந்து க்ளீன் போல்டு ஆகி பத்தாவது விக்கெட்டாக வெளியேறினார்.

தாக்கம் தந்த மனீஷ் பாண்டே

இந்த சீசனில் இதுவரை விளையாடமலேயே இருந்து வந்த மனீஷ் பாண்டே இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். நெருக்கடியான நேரத்தில் பேட் செய்ய வந்த அவர் 42 ரன்கள் அடித்து அணிக்கு முக்கிய பங்களிப்பை தந்தார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது பேட்ஸ்மேனாக பேட் செய்த ரகுவன்ஷி அடித்த 13 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

மற்ற கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினார்கள்.

நெருக்கடி தந்த பும்ரா

மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா வழக்கம்போல் எதிரணி பேட்ஸ்மேன்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினார். 3.5 ஓவரில் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

நுவான் துஷாரா 4 ஓவரில் 42 ரன்கள், பாண்ட்யா 4 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்த போதிலும், துஷாரா 3, பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சிறப்பாக பவுலிங் செய்த ஸ்பின்னரான சாவ்லா 3 ஓவரில் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point